/* */

திருச்சி மீன் மார்க்கெட்டிற்கு செல்லும் குழுமணி சாலையின் ஆபத்தான நிலை

திருச்சி மீன் மார்க்கெட்டிற்கு செல்லும் குழுமணி சாலையின் ஆபத்தான நிலை
X

திருச்சி லிங்கநகர் பகுதியில் குழுமணி சாலை அபாயகரமான நிலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

திருச்சி குழுமணி சாலையில் காசி விளங்கி பாலம் அருகில் மாநகராட்சியால் நடத்தப்படும் மீன் மொத்த விற்பனை மார்க்கெட் இயங்கி வருகிறது. அகலம் குறைவான இந்த சாலையின் ஒரு புறம் உய்ய கொண்டான் வாய்க்காலும் மறு புறமும் பள்ளமும் உள்ளது.

இந்நிலையில் லிங்கம் நகருக்கும் மீன் மார்க்கெட்டிற்கும் இடையில் மெயின்ரோட்டில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இரவு நேரத்தில், மழைக்காலத்தில் பஸ்,லாரி போன்ற வாகனங்கள் சென்றால் இந்த சாலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

அதுபோன்ற விபத்து ஏற்படும் முன் உடனே இந்த அபாயகரமான மண் சரியை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என லிங்கம் நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் சிவகுமார் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

மேலும் இந்த சாலையில் அதிகமான வாகனங்கள் மிகவும் வேகமாக செல்வது வழக்கமாகி விட்டது.இரு சக்கர வாகனம், மற்றும் நடந்து செல்பவர்களும் பயந்து, பயந்து பயணிக்கவேண்டியுள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Updated On: 29 Oct 2021 6:12 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!