/* */

திருச்சியில் இன்று ஒரே நாளில் 632 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருச்சியில் இன்று ஒரே நாளில் 632 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

திருச்சியில் இன்று ஒரே நாளில் 632 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
பைல் படம்

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த முதல் அலை மற்றும் இரண்டாவது அலையில் பாதிப்புகளும், இறப்பு விகிதமும் அதிகரித்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பெரும் முயற்சியாலும் கொரோனா தடுப்பூசி மற்றும் முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றின் மூலம் கொரோனா படிப்படியாக குறைந்து வந்தது. இதற்கிடையில் ஒமிக்ரான் நோய்தொற்று பரவி வருவதாக சுகாதார துறை தெரிவித்தது. மேலும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகள் தற்போது இரண்டு மடங்காக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாள் (21-1-2022) மட்டும் 632 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 517 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் வீடுகளில் இருந்து 3,847 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் இறந்தனர் என்று அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 21 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  2. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  4. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  5. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  6. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  8. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்