/* */

திருச்சியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டம் துவக்கி வைப்பு

திருச்சியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருச்சியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டம் துவக்கி வைப்பு
X

திருச்சியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் துவக்கி வைத்தார்.

மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதுபற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று மாணவ மாணவிகள்பங்கேற்ற விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்பட்டது.திருச்சி பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் உப்புசத்தியாகிரக தியாகிகள் நினைவு ஸ்தூபி அருகில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு ஓட்டமானது ரெயில்வே ஜங்ஷன், ரெயில்வே மேம்பாலம், மன்னார்புரம் வழியாக அண்ணாவிளையாட்டுஅரங்கத்தை அடைந்தது. இதில் மாணவர்களுடன் சேர்ந்து மாவட்ட விளையாட்டு அதிகாரி ஞானசுகந்தி, வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், தாசில்தார் சேக்முஜிப், காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம் ஆகியோரும் பங்கேற்றனர்.

Updated On: 18 July 2022 11:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  2. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  8. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  10. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு