இருதரப்பினரிடையே மோதல்: 9 பேர் மீது வழக்கு

திருச்சி உறையூர் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இருதரப்பினரிடையே மோதல்: 9 பேர் மீது வழக்கு
X

திருச்சி உறையூர் பாக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அசாருதீன் (வயது 25). இவருடைய உறவினர் சிராஜூதீன் (வயது 54). முதல் தளத்தில் அசாருதீனும், கீழ் தளத்தில் சிராஜூதீனும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

இரு குடும்பத்துக்கும் இடையே ஏற்கனவே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு கைகலப்பானது. அப்போது அசாருதீனை சிராஜூதீன், அவருடைய மனைவி அன்சல் சல்மா (வயது 44), மகன் முகமது ஆரீப் (வயது 19) மற்றும் 2 மகள்கள் சேர்ந்து உருட்டுக்கட்டை மற்றும் கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

அதேபோல, அன்சல் சல்மாவை அசாருதீன், மல்லிகா பானு (வயது 42), நர்கீஸ் பானு (வயது 41), முத்துகிரபேகம் (வயது 45) ஆகியோர் கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் உறையூர் போலீசார் இருதரப்பை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 26 Nov 2021 4:30 AM GMT

Related News

Latest News

 1. திருவாடாணை
  அஞ்சுகோட்டை கூட்டுறவு சங்கத்தில் பயிர் காப்பீடு தொகை மோசடி: செயலாளர்...
 2. கடலூர்
  கழிவு நீர், குப்பை கலப்பால் கடலூர் வெள்ளி கடற்கரை செந்நிறமாக மாறியது
 3. உதகமண்டலம்
  நீலகிரி ஆட்சியர் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
 4. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 69 பேருக்கு கொரோனா பாதிப்பு
 5. பண்ருட்டி
  கடலூரில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
 6. கடலூர்
  கடலூரில் மழை வெள்ள சீரமைப்பு பணிகளை கலெக்டர் படகில் சென்று ஆய்வு
 7. குமாரபாளையம்
  கார்த்திகை ஏகாதசி: குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு...
 8. திருப்போரூர்
  திருப்போரூர்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு
 9. மன்னார்குடி
  மன்னார்குடியில் இருந்து ஜெய்ப்பூருக்கு ரயில் மூலம் முட்டை அனுப்பி...
 10. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று 42 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு