/* */

நாளை ஆயுதபூஜை: திருச்சியில் விற்பனைக்காக குவிந்த பூசணிக்காய்கள்

நாளை ஆயுதபூஜையையொட்டி திருச்சியில் பூசணிக்காய்கள் விற்பனைக்காக ஏராளமான அளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

நாளை ஆயுதபூஜை: திருச்சியில் விற்பனைக்காக குவிந்த பூசணிக்காய்கள்
X

திருச்சியில் ஆயுத பூஜை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள பூசணிக்காய்கள்

அக்டோபர் 14ஆம் தேதியான நாளை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. ஆயுதபூஜை வீடுகளில் கொண்டாடப்படுவதோடு மட்டுமின்றி வர்த்தக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், மெக்கானிக் பட்டறைகள் என அனைத்து இடங்களிலும் பூஜை நடத்தி கொண்டாடப்படும்.

இது தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்து கொண்டாடப்படும் விழா என்பதால் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு தொழில்செய்யும் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆயுத பூஜை விழாவின் போது சுவாமிக்கு படையல் இட்டு வழிபாடு செய்த பின்னர் திருஷ்டி பரிகாரம் காண்பதற்காக பூசணிக்காயை கடை அல்லது பட்டறை முழுவதும் சுற்றி முச்சந்திகளில் அல்லது சாலைகளிலோ உடைப்பது வழக்கம்.

எனவே ஆயுத பூஜையில் பூசணிக்காய்க்கு முக்கிய இடம் உண்டு. எனவே பூசணிக்காய் விற்பனை திருச்சியில் களைகட்டியுள்ளது. திருச்சி குட்ஷெட் மேம்பாலம் பகுதியில் ஏராளமான பூசணிக்காய்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. பெரம்பலூரில் விளைந்த இந்த பூசணிக்காய் முசிறியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் விற்பனை செய்து வருகிறார். ஒரு பூசணிக்காய் அதன் அளவைப் பொறுத்து 30 ரூபாய் முதல் அதிகபட்சமாக 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Updated On: 13 Oct 2021 12:10 PM GMT

Related News