/* */

திருச்சி வடக்கு மாவட்டத்தில் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு துவக்க விழா

திருச்சி வடக்கு மாவட்டத்தில் அ.தி.மு.க. வின் 51-ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி வடக்கு மாவட்டத்தில் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு துவக்க விழா
X

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பரஞ்ஜோதி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற கட்சியை தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவுற்று, 51 வது ஆண்டு பிறந்து உள்ளது. எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட இந்த இயக்கம் சுமார் 30 ஆண்டுகள் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்துள்ளது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா அ.தி.மு.க.வை வலுப்படுத்தினார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. அந்த சூழலிலும் எடப்பாடி பழனிசாமி சுமார் நான்கரை ஆண்டு காலம் ஆட்சியை நடத்தி முடித்தார்.

ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்த சதவீத வாக்குகளின் வித்தியாசத்தில் அ.தி.மு.க. தோல்வியை தழுவியதால் தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது. அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீண்டும் பிளவு உண்டானது. அ.தி.மு.க.வை யார் வழி நடத்துவது என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் கோர்ட்டு தீப்பிற்காக எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் காத்திருக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அ.தி.மு.க. கட்சி தொடங்கப்பட்டதன் 51 வது ஆண்டு தொடக்க விழாவினை சிறப்பாக கொண்டாடுமாறு சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர், தற்போதைய சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். அதன்படி தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி அ.தி.மு.க.51 -வது ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.


அந்த வகையில்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் மணப்பாறை மறவனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, ஜீயபுரம், பெட்டவாய்த்தலை, முசிறி, துறையூர், கரட்டாம்பட்டி, மண்ணச்சநல்லூர் ஆகிய இடங்களில் இன்று (17.10.2022 திங்கட்கிழமை) பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது திருவுருவ சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்தும், கழக கொடியினை ஏற்றி இனிப்பு வழங்கியும், ஏழை எளியவருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி இந்த விழாக்களில் கலந்து கொண்டு ஏழை எளியவர்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அந்தந்த பகுதி ஒன்றிய கழக செயலாளர்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் வளர்மதி, கழக எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், ஒன்றிய கழக செயலாளர்கள் கோப்பு நடராஜன், மணப்பாறை செல்வராஜ், சார்பு அணி செயலாளர்கள் ரமேஷ், புல்லட் ஜான், அன்னை கோபால், விவேக் மற்றும் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Oct 2022 12:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!