திருச்சி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் பலி

திருச்சி அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருச்சி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் பலி
X

விபத்துக்குள்ளான பஸ்சை மீட்கும் பணி நடந்தது.

திருச்சி தீரன் நகர் பணிமனையில் இருந்து துறையூர் பணிமனைக்கு அரசு பேருந்து ஒன்று இன்று மாலை சென்று கொண்டிருந்தது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டயம் பேட்டை அருகே சென்றபோது அந்த பஸ் பின்னால் வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் எதிர் புற திசைக்கு மாறி சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அரசு பஸ் ஓட்டுநர் ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பஸ் பள்ளத்தில் இருந்து மீட்டனர். இதுபற்றி ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Jun 2022 3:11 PM GMT

Related News