/* */

திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் 5 நாட்கள் சிறப்பு புத்தக கண்காட்சி

திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் 5 நாட்கள் சிறப்பு புத்தக கண்காட்சி துவங்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் 5 நாட்கள் சிறப்பு புத்தக கண்காட்சி
X

சுதந்திர தினத்தையொட்டி திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் ஐந்து நாள் சிறப்பு புத்தக கண்காட்சி  துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 75வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் ஐந்து நாட்கள் சிறப்பு புத்தக கண்காட்சி நூலகத்தில் துவங்கியது. தென்னூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விமலா, இடை நிலை ஆசிரியர் லாரன்ஸ் வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கண்காட்சி குறித்து நூலகர் புகழேந்தி பேசுகையில், இந்தியாவிற்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திரம் கிடைத்தது. நமது தேச தலைவர்கள் பல தியாகங்களை செய்து சுதந்திரம் வாங்கி கொடுத்த நிலையில் அதை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வேண்டியது நமது கடமையாகும். அந்த வகையில் ஆண்டுதோறும் அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. புத்தூர் கிளை நூலகத்தில் சுதந்திர தினத்தை பற்றியும் சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகத்தையும் இளம் தலைமுறையினர் அறியும் வகையில் காந்தி எனும் மனிதர், ஒரு மனிதன் மகாத்மா ஆன கதை, சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், இந்திய விடுதலையின் தியாகச் சுடர்கள், இந்தியாவின் இதயங்கவர்ந்த மாமனிதர்கள், காந்தியின் இளமைப் பருவம், விடுதலை வீரர்கள், மகாத்மா காந்தியின் ஓர் உலகம், விடுதலை வேட்கை, தேசியக் கவி ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி வாழ்க்கை வரலாறு, வீரமங்கை வேலு நாச்சியார், பாரத நாட்டு பெண்மணிகளின் வீரமும் தியாகமும், விடுதலை வேந்தன் விஸ்வநாத தாஸ், ஆசிய ஜோதி ஜவகர், கவியரசி சரோஜினி தேவி, உலகம் போற்றும் உத்தமர் விடுதலைக்கு போராடிய தமிழக தலைவர்கள், சத்திய சோதனை தரும் நித்திய பாடங்கள், காந்தியின் கதை, மகாத்மாவின் மணிமொழிகள், விடுதலை வீரர் அம்பேத்கர் காவியம், பாரதம் கண்ட சுதந்திர சுடர்கள், நாட்டுக்கு உழைத்த நல்லவர், இந்தியாவின் இதயங் கவர்ந்த மாமனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை காட்சி படுத்தியுள்ளோம். வாசகர்கள் சுதந்திர இந்தியா வரலாற்றை படித்து பயன்பெற வேண்டுகிறோம் என்றார்.

கிளை நூலகர் புகழேந்தி, வாசகர் வட்டத் தலைவர் விஜயகுமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

Updated On: 8 Aug 2022 7:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி