/* */

கொலை வழக்குகளில் தொடர்புடைய 2 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சியில் கொலை மற்றும் அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 2 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

கொலை வழக்குகளில் தொடர்புடைய 2 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக ஜி.கார்த்திகேயன் பொறுப்பேற்றதில் இருந்து, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தும், கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் ரோந்து செய்தும், தீவிர வாகன தணிக்கை செய்ய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்ணாநகர், மேல அம்பிகாபுரம் அருகில் சிலம்பரசன் (வயது 25), என்பவரை குடும்ப சொத்து பிரச்சினை காரணமாக இளவரசன், மற்றும் பலர் சேர்ந்து பயங்கர ஆயுதங்களால் தலை மற்றும் கை பகுதியில் தாக்கி கொலை செய்தது தொடர்பாக அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கில் இளவரசன் என்பவரை கடந்த 23.10.2021-ந்தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ஆணை சார்வு செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பாலக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேட்டுத்தெருவில் உள்ள ரேசன் கடை அருகே 21.10.2021-ந்தேதி கிருபாகரன் என்பவர் ஒருவரை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், கத்தியால் தோள்பட்டை மற்றும் முதுகில் தாக்கியதாக பாலக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் எதிரியான கிருபாகரன் கடந்த 22.10.2021-ந்தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது தொடர்பாக விசாரணையில் இந்த வழக்குகளின் குற்றவாளிகளான எதிரிகள் இளவரசன் மற்றும் கிருபாகரன் ஆகியோர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. எனவே, இளவரசன் மற்றும் கிருபாகரன் ஆகியோர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் மற்றும் பாலக்கரை காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டுள்ளார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் இளவரசன் மற்றும் கிருபாகரன் ஆகியோருக்கு குண்டர் தடுப்பு சட்டத்தின்படி ஆணை சார்வு செய்யப்பட்டது.


Updated On: 10 Dec 2021 6:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...