/* */

துறையூர் கடையில் 150 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்

துறையூர் கடையில் 150 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

துறையூர் கடையில் 150 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்
X

துறையூரில் 150கிலோ கெட்டுக்போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஆட்டிறைச்சிக் கடைகளில் நகராட்சி சுகாதார அதிகாரி மூர்த்தி ,உணவு பாதுகாப்பு அதிகாரி ரங்கநாதன் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது காந்தி ரோட்டில் உள்ள ஒரு கடையில் 150 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்ஜில் வைத்து அதனை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையொட்டி அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர். மேலும் இந்த ஆட்டிறைச்சியை துறையூர் நகரில் எந்தெந்த அசைவ ஹோட்டல்களில் விற்பனை செய்தார்கள் ?அதனால் யாரும் பாதிக்கப்பட்டார்களா என்பது பற்றியும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 18 May 2022 1:00 PM GMT

Related News