திருச்சி அருகே குத்தகை நில தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி

திருச்சி அருகே விவசாய நிலம் குத்தகை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருச்சி அருகே குத்தகை நில தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி
X

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் 20 வருடங்களாக அனுபவ பாத்தியத்தில் குத்தகைக்கு விவசாயம் செய்து வந்தார்.

இந்நிலையில் வேங்கூர் நடுத்தெருவை சேர்ந்த அன்னகாமு மற்றும் சுதாகர் ஆகியோர் ராஜசேகர் வீட்டிற்கு சென்று போலி ஆவணங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருவதாக கூறி,நிலத்தை கேட்டு மிரட்டி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் மனம் உடைந்த ராஜசேகர் மனைவி மாலதி திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மாலதியின் கணவர் ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 Oct 2021 5:01 AM GMT

Related News

Latest News

 1. ஜோலார்பேட்டை
  நாட்றம்பள்ளி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு
 2. பாளையங்கோட்டை
  அரசு அருங்காட்சியகத்தில் காணி மக்கள் பயன்படுத்திய சிக்கி முக்கி கல்
 3. மயிலாடுதுறை
  நண்பரின் பிறந்த நாளை கொண்டாட சென்ற 2 மாணவர்கள் கடலில் மூழ்கி மாயம்
 4. அவினாசி
  அவினாசியில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்
 5. காஞ்சிபுரம்
  585 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை:எம்பி. எம்.எல்.ஏ க்கள்...
 6. இராஜபாளையம்
  புலவாய்கரை கண்மாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
 7. தேனி
  ஆதரவற்றவர்களுக்கு கரம் கொடுத்த கொடையாளிகளுக்கு பாராட்டு விழா
 8. இராஜபாளையம்
  இராசபாளையம் அருகே அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர்...
 9. ஓசூர்
  கர்நாடகாவிலிருந்து வரும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ...
 10. கோவை மாநகர்
  கோவையில் ஒரு மணி நேரம் கனமழை ; வெள்ளநீரில் சிக்கிய வாகனங்கள்