திருச்சி அருகே தி. மு.க. பிரமுகர்கள் மோதல்- ஒருவர் மண்டை உடைப்பு

திருச்சி அருகே தி.மு.க. பிரமுகர்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் மண்டை உடைந்தது.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருச்சி அருகே தி. மு.க. பிரமுகர்கள் மோதல்- ஒருவர் மண்டை உடைப்பு
X

திருவெறும்பூர் போலீஸ் நிலையம்

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பனையகுறிச்சியை சேர்ந்தவர் மகாதேவன் (வயது38). இவர் ஒன்றிய கவுன்சிலராகவும், தி.மு.க.வில் ஒன்றிய பிரதிநிதியாகவும் உள்ளார்.

அதே ஊரை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவியின் கணவரும், தி.மு.க. பிரமுகருமான பார்த்தசாரதிக்கும், மாகாதேவனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று மகாதேவன் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பார்த்தசாரதி (வயது 42), அவரது தம்பி விஜி மற்றும் சிலர் சேர்ந்து மகாதேவனிடம் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு மகாதேவன் தரப்பினரும் தாக்கி உள்ளனர்.

இதில் மகாதேவனுக்கு மண்டை உடைந்தும், பார்த்தசாரதி மற்றும் விஜிக்கு சிராய்ப்பு காயம் மற்றும் உள் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் இரு தரப்பினரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 2021-09-17T18:17:36+05:30

Related News