/* */

திருவெறும்பூரில் மது போதைக்கு அடிமையான பெல் ஊழியர் மர்ம சாவு

திருச்சி திருவெறும்பூரில் மது போதைக்கு அடிமையான பெல் ஊழியர் மர்மமான முறையில் இறந்தார்.

HIGHLIGHTS

திருவெறும்பூரில் மது போதைக்கு அடிமையான பெல் ஊழியர் மர்ம சாவு
X

திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன டவுன்ஷிப் கைலாசபுரம் இ 3 பகுதியில் வசித்து வந்தவர் பிரகாஷ் (வயது 35). இவர் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இவருக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு வனிதா என்பவருடன் திருமணமானது. குழந்தைகள் ஏதும் இல்லை.இந்த நிலையில் பிரகாஷ் மது பழக்கத்திற்கு அடிமையாகி அதற்கான சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். குடிப்பழக்கத்தினால் பிரகாஷுக்கும், வனிதாவிற்கும் இடையே பிரச்சனை அதிகமாகியுள்ளது.

அதனால் வனிதா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தனது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் பிரகாஷ் மட்டும் மாடிவீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.நேற்று மாலை கீழ் வீட்டில் வசிப்பவர் துர்நாற்றம் வீசுவதாக பெல் செக்யூரிட்டி ஆபீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதனடிப்படையில் செக்யூரிட்டி அலுவலர்கள் பெல் நிறுவன காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பார்த்தபோது வீடு உள் பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிரகாஷ் வீட்டின் தரையில் இறந்த நிலையில் குப்புற கிடந்துள்ளார்.

உடனடியாக பெல் போலீசார் தடய அறிவியல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் சோதனை செய்தார்.

பின்னர் அழுகிய நிலையில் இருந்த பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில் முதற்கட்ட விசாரணையில் பிரகாஷ் கடந்த 13-ம் தேதிக்கு பிறகு வேலைக்கு செல்லவில்லை என்பது தெரிய வந்தது.

மேலும் பிரகாஷ் அவரது மனைவி வனிதாவிடம் கடந்த 27-ம் தேதி மதியம் செல்போனில் பேசியதாகவும், அதன் பிறகு தான் இறந்திருக்க வேண்டும் என்றும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிரகாஷின் வீடு முழுவதும் காலி மது பாட்டில்கள் கிடந்ததை பார்க்கும்போது அதிக மது போதையில் பிரகாஷ் இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இருந்தாலும் பிரகாஷ் இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் முழுமையாக தெரியவரும்.இந்த சம்பவம் பெல் நிறுவன குடியிருப்பு தொழிற்சாலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 30 Sep 2021 5:00 AM GMT

Related News