/* */

திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழாவில் 52 பேர் காயம்: ஒருவர் சாவு

திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் 53 பேர் காயமடைந்ததில் ஒருவர் உயிரிழந்தார் .

HIGHLIGHTS

திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழாவில் 52 பேர் காயம்: ஒருவர் சாவு
X

மீனாட்சி சுந்தரம்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஸ்ரீ நற்கடல்குடி கருப்பணசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்காக அரசுக்கு வழிகாட்டுதலின்படி இன்று காலை தொடங்கியது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி.சுஜித்குமார், கோட்டாட்சியர் தவச்செல்வம், தாசில்தார் செல்வ கணேஷ், பிடிஒக்கள் லலிதா, ஜான்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பச்சை கொடியை அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 480 ஜல்லிக்கட்டு காளைகள், 258 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். அதில் மாடுபிடி வீரர்கள் 4 பிரிவுகளாக களமிறக்கப்பட்டனர்.

மாடுகளுக்கு கால்நடை துறை மாவட்ட இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து சான்றிதழ்களை வழங்கினார்கள்.

மாடுபிடி வீரர்களுக்கு திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். மேலும் ஜல்லிகட்டு போட்டியில் மாடு பாய்ந்ததில் காயமடைந்தவர்களுக்கு முதல் கட்ட சிகிச்சைகளை அளித்தனர்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு காளையை கொண்டு வந்தபோது, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம் (30) என்பவர் மீது மாடு பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் மாடு பாய்ந்ததில் மாட்டின் உரிமையாளர்கள் கும்பகுடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (26), கொட்டப்பட்டு மலைக்கோவிலை சேர்ந்த வைரமணி (24), கீழ பெருவளநல்லூரை சேர்ந்த வேலு(27) பார்வையாளர்கள் காந்தலூர் சிவானந்தம்(32), பேரூரை சேர்ந்த சின்னா (19), புதுக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார்(30), ஆலங்குடிப்பட்டி பாஸ்கர் (45), விழா கமிட்டி கர்ணன் (48), அசூர் டேவிட், கந்தர்வகோட்டை பவுன் துரை ஆகியோர் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா குழு ஒருங்கிணைப்பாளருமான ராஜா(52), பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலையத்தை சேர்ந்த கலைவாணன்(32) உட்பட மொத்தம் 44 பேர் இதில் காயம் அடைந்தனர்.

மேலும், இதில் ஜல்லிக்கட்டு போட்டி மாடுபிடி வீரர் உபேர், மாட்டின் உரிமையாளர்கள் 24 பேர் மற்றும் பார்வையாளர்கள் 25 பேர், விழா கமிட்டியை சேர்ந்த 2 பேர், பாதுகாப்பு பணியில் இடுப்பட்ட போலீஸ்காரர் ஒருவர் அடங்குவார்கள். ஜல்லிக்கட்டுப்போட்டியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக போட்டி துவங்குவதற்கு முன்பு கலெக்டர் வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். முதலில் மாடு பிடித்தவருக்கு அரை பவுன் தங்க மோதிரத்தை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி, தொடங்கி வைத்தார். வெற்றிப் பெற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சார்பில் அண்டா மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசு புதுக்கோட்டை திருநல்லூரை சேர்ந்த யோகேஷ் 12 மாடுகளை பிடித்தவருக்கு ஒரு பைக்கும், பூலாங்குடியை சேர்ந்த மனோஜ் 9 மாடுகளை பிடித்து இரண்டாவது பரிசு கலர் டிவியும் வழங்கப்பட்டது.

அதேபோல் சிறந்த காளைக்கு முதல் பரிசாக கைக்குறிச்சி தமிழ்செல்வன் பைக், குண்டூர் எம் ஐ டி, ஆர்எஸ்ஆர் ரமேஷ் இரண்டாம் பரிசு கலர் டிவியும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திருவெறும்பூர் தாசில்தார் மற்றும் வருவாய்துறையினர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Updated On: 15 Jan 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
  2. தமிழ்நாடு
    தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
  3. வீடியோ
    Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
  4. வீடியோ
    Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
  5. இந்தியா
    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
  6. இந்தியா
    தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
  7. கிணத்துக்கடவு
    ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
  8. வீடியோ
    Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
  9. வீடியோ
    கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
  10. வீடியோ
    திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...