திருவெறும்பூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் 40 பவுன் தங்கம்,வைர நகைகள் கொள்ளை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் 40 பவுன் தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவெறும்பூரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் 40 பவுன் தங்கம்,வைர நகைகள் கொள்ளை
X
திருவெறும்பூர் அருகே கொள்ளை நடந்த  வீடு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அம்மன் நகர் விஸ்தரிப்பு 6-வது தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் செல்லையன் (வயது 62). இவர் கடந்த 2-ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் நேற்று காலை ஊருக்கு வந்து வீட்டை பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை மற்றும் 1 பவுன் வைரத்தோடு ஆகியவை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் அதே பகுதியில் உள்ள சரவணன் (வயது 40), என்ற தனியார் நிறுவன ஊழியர் கடந்த 7-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான மன்னார்குடிக்கு சென்றுவிட்டு நேற்று மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ஒரு கிலோ வெள்ளி, ஒரு பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப்புடவைகள் மற்றும் வீட்டில் இருந்த எல்.இ.டி. டி.வி ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல சரவணனின் வீட்டிற்கு அருகே வசிப்பவர் ஓய்வு பெற்ற பெல் ஊழியரான வரதாச்சாரி (வயது 62), இவர் சேலத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சரவணன் நேற்று அதிகாலை பக்கத்து வீட்டில் ஏதோ சத்தம் கேட்கிறது என்று எழுந்து பார்த்தபோது, பூட்டியிருந்த வரதாச்சாரி வீட்டில் மின்விளக்குகள் எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். என்னவென்று பார்த்தபோது அங்கு வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வந்ததை பார்த்து, சத்தம் போட்டுள்ளார்.

இதனால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சரவணன் வரதாச்சாரிக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த வரதாச்சாரி வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது இரண்டு பீரோ உடைக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 30 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து வரதாச்சாரி திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் இந்த மூன்று சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை நடந்ததால் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Updated On: 2021-09-14T12:49:50+05:30

Related News