/* */

வைகுந்த ஏகாதசி: ஸ்ரீரங்கம் கோவிலில் கொட்டகை அமைக்கும் பணி துவக்கம்

வைகுந்த ஏகாதசி பெருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கொட்டகை அமைக்கும் பணி துவங்கி உள்ளது.

HIGHLIGHTS

வைகுந்த ஏகாதசி: ஸ்ரீரங்கம் கோவிலில் கொட்டகை அமைக்கும் பணி துவக்கம்
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வளாகத்தில் உள்ள மணல் வெளியில் பிரமாண்ட கொட்டகை அமைப்பதற்காக தென்னைமரம் நடும் பணி இன்று நடைபெற்றது.

பூலோக வைகுண்டம், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது என போற்றப்படுவது ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் தான் என்றாலும் சித்திரை தேர் திருவிழா, பங்குனி தேர் திருவிழா ஆகியவை மிக முக்கியமானவை ஆகும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழா மிகவும் முதன்மையானதாகும்.

பகல் பத்து,இராப்பத்து என மொத்தம் 20 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். பகல் பத்தின் இறுதி நாளன்று நடைபெறும் பரமபத வாசல் திறப்பு அதாவது சொர்க்கவாசல் திறப்பு சிகர நிகழ்ச்சியாகும். சொர்க்கவாசல் திறப்பின் போது உற்சவர் நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் இப்பிறவியில் மோட்சத்தை அடையலாம் என்பதால் நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து செல்வதற்காக பக்தர்கள் போட்டி போடுவது உண்டு. மேலும் திருவிழா நடைபெறும் 20 நாட்களும் உற்சவரையும் மூலவரையும் தரிசித்தால் புண்ணியம் கிடைக்கும் என நம்பப்படுவதால் 20 நாட்களும் ஸ்ரீரங்கமே விழாக்கோலம் பூண்டு காணப்படும். அனைத்து கோபுரங்களும் மின்விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்.

தமிழகம் மட்டும் இன்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தோம் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ஸ்ரீரங்கத்தில் குவிவார்கள். இத்தகைய சிறப்புக்குரிய இந்த வைகுந்த ஏகாதசி பெரு விழா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி திருநெடுந் தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 12ஆம் தேதி நிறைவு பெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது.இவ்விழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.


பகல் பத்து விழாவின் போது உற்சவர் நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் தினமும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.இராப்பத்து உற்சவத்தின் போது பத்து நாட்களும் ஆஸ்தான மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். சொர்க்கவாசல் திறப்பன்று பரமபத வாசலை கடந்து வெளியே வரும் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள மணல் வெளியில் பக்தர்களை தேடி வந்து சுற்றி சுற்றி சேவை சாதிப்பது வழக்கம். சுமார் ஒரு மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும். அப்பொழுது பக்தர்கள் உற்சவர் நம்பெருமாளை மிக அருகில் இருந்து பார்க்கக்கூடிய வசதி கிடைக்கும். இதற்காக அந்த மணல் வெளியில் பிரம்மாண்டமான கொட்டகை அமைக்கப்படும். இந்த கொட்டகை அமைப்பதற்கான பணி இன்று தொடங்கியுள்ளது. இதற்காக அங்கு ராட்சத தென்னை மரங்களை ஜே.சி.பி. எந்திரம் மற்றும் கிரேன் உதவியுடன் நடும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

Updated On: 18 Nov 2022 7:41 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!