Begin typing your search above and press return to search.
அந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு
முன்விரோதம் காரணமாக அந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு
HIGHLIGHTS

திருச்சி அந்தநல்லூர் திமுக ஒன்றிய துணை செயலாளர் சக்திவேல். இவர் போசம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இவருக்கும் எட்டரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த திலீப் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுடுகாட்டில் நின்று கொண்டிருந்த சக்திவேலை அந்த வழியாக பைக்கில் வந்த தீலிப் உள்ளிட்ட மூன்று பேர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
படுகாயமடைந்த சக்திவேல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக போசம்பட்டி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.