திருச்சி காவிரி பாலத்தில் ரயிலை மறிக்க வந்த அய்யாக்கண்ணு கைது

திருச்சி காவிரி பாலத்தில் ரயிலை மறிக்க முயன்ற விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருச்சி காவிரி பாலத்தில் ரயிலை மறிக்க வந்த அய்யாக்கண்ணு கைது
X

திருச்சி காவிரி பாலத்தில் வைகை  எக்ஸ்பிரஸ்  ரயிலை மறிப்பதற்காக வந்த  விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை போலீசார் கைது செய்தனர்.

விவசாய கடனை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகரம் டெல்லியில் நூறு நாட்களுக்கும் மேலாக நூதன முறையில் பல போராட்டடங்களை நடத்தி ஒட்டு மொத்த இந்தியாவின் பார்வையையும் தன் பக்கம் இழுத்தவர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு.

திருச்சியை சேர்ந்த இவர் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறகோரி நடைபெறும் போராட்டத்தை ஆதரித்தும், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

கைது செய்யப்பட்ட அய்யாக்கண்ணுவை போலீசார் ஜீப்பில் ஏற்றினர்.

இதற்காக இன்று காலை திருச்சி ஓயாமாரி சுடுகாடு அருகில் காவிரி ரயில்வே பாலத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்த வந்த அய்யாக்கண்ணுவை உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்் சண்முகவேல் கைது செய்து உறையூர் காவிரி திருமண மண்டபத்தில் தங்க வைத்தார். அதேபோல அந்த அமைப்பின் சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 95-க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

Updated On: 27 Sep 2021 7:30 AM GMT

Related News