திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
X

திருச்சியை அடுத்த முத்தரசநல்லூர் முத்தையா நகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகுநாத் (வயது 34). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு சோமரசம்பேட்டை அருகே உள்ள தாயனூருக்கு சென்று இருந்தார். நேற்று காலை அவர் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1½ பவுன்தங்க நகை மற்றும் கொலுசு திருடப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 Dec 2021 6:44 AM GMT

Related News