/* */

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்களை அமரவைத்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்  பக்தர்களுக்கு அன்னதானம்
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அன்னதானம் வழங்கும்  திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் தமிழ்நாடு முதல்லமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் ஆலோசனையின் பேரில் அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.

சுமார் 548 நாட்களுக்கு பிறகு ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோயில் அன்னதான கூடத்தில் கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மேற்பார்வையில் பக்தர்களை சமூக இடைவெளியுடன் அமர வைத்து வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது.

அப்பொழுது கோயில் உதவி ஆணையர் கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், மேலாளர் உமா ஆகியோர் உடன் இருந்தனர், நீண்ட நாட்களுக்கு பிறகு கோயிலில் அமர்ந்து அன்னதான உணவு அருந்தியதில் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 20 Sep 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  4. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  5. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  6. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  7. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  9. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்