/* */

திருச்சி வடக்கு மாவட்டத்தில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் வருகிற 17-ம் தேதி அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

திருச்சி வடக்கு மாவட்டத்தில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு  கொண்டாட்டம்
X

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பரஞ்ஜோதி.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வரலாற்று சிறப்புமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் "பொன்விழா" ஆண்டை கொண்டாடும் விதமாக வருகின்ற (17-10-2021) ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் கழக நிர்வாகிகள் ஆங்காங்கே அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா திருவுருவச் சிலைகளுக்கும், அவர்களது திருவுருவப் படங்களுக்கும் மாலை அணிவித்து சிறப்பிக்குமாறும் ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு அளவிலான அனைத்து இடங்களிலும் கழகக் கொடியினை ஏற்றி இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்றைய தினம் காலை 9:00 மணி - சோமரசம்பேட்டை எம்.ஜி.ஆர் சிலை,காலை 9:30 மணி- குழுமணி எம்.ஜி.ஆர் சிலை,காலை 10:00 மணி - ஜீயபுரம் மெயின் ரோடு,காலை 10:15 மணி - பெட்டவாய்த்தலை கடைவீதி காலை 11:00 மணி - முசிறி அண்ணா சிலை,காலை 11:30 மணி - துறையூர் எம்.ஜி.ஆர் சிலை,மதியம் 12:00 மணி - கரட்டாம்பட்டி எம்.ஜி.ஆர். சிலை, மதியம் 12:15 மணி - புலிவலம் கடைவீதி, மதியம் 12:30 - மண்ணச்சநல்லூர் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலை ஆகிய இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.




Updated On: 14 Oct 2021 3:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  2. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  8. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  10. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு