/* */

திருச்சி பிரிமியர் லயன்ஸ் சங்கத்தின் மண்டல மாநாடு : மாவட்ட ஆளுநர் பங்கேற்பு

பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மாவட்டம் 324F. மண்டலம் 4ன் மாநாடு திருச்சி மாத்தூரில் நடைபெற்றது. மாவட்ட ஆளுநர் எம்ஜெஎப் லையன் சௌமா ராஜரத்தினம் கலந்து கொண்டார்.

HIGHLIGHTS

திருச்சி பிரிமியர் லயன்ஸ் சங்கத்தின் மண்டல மாநாடு : மாவட்ட ஆளுநர் பங்கேற்பு
X

திருச்சியில் நடந்த பிரிமியர் லயன்ஸ் சங்க மண்டல மாநாட்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்கோப் தொண்டு நிறுவன தலைவர் சுப்புராமன் மாவட்ட ஆளுநர் எம்ஜெஎப் லயன் செளமா ராஜரெத்தினத்தால் கொளரவிக்கப்பட்டார். 

திருச்சி பிரிமியர் மண்டல சந்திப்பு மாநாட்டை மண்டல தலைவர் எம்ஜெஎஃப் லயன் இன்ஜினியர் சோமசுந்தரம் துவக்கி வைத்தார். லயன்ஸ் சங்கங்களின் பதாகை அணிவகுப்பை திருச்சி பிரிமியர் லயன்ஸ் சங்கத்தின் எம்ஜெஎஃப் லயன் எஸ்.பி.ராஜேந்திரன் ஒருங்கிணைத்தார்.

லயன் மகேஷ்வரி ராஜரெத்தினம், லயன் ரஞ்சிதம் சேது சுப்ரமணியன், லயன் ஹேமா இமயவரம்பன், லயன் சர்மிளா சோமசுந்தரம், லயன் பிரமிளா செந்தில்குமார் ஆகியோர் மாநாட்டை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.


பஞ்சப்பட்டி லயன்ஸ் சங்க தலைவர் லயன் குணசேகரன், பெரம்பலூர் ராயல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். இறைவணக்கம் பாடலை சக்தி லயன்ஸ் சங்கம் லயன் நிரஞ்சன பிரகாஷ்குமார் பாடினார். லயன்ஸ் வழிபாடு பாடலை பெரம்பலூர் லயன்ஸ் சங்க தலைவர் முரளிதரன் வாசித்தார்.

உலக அமைதிக்காவும், மண்டல தலைவரின் தந்தை மறைந்த இன்ஜினியர் சீனிவாசனுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. செயலாண்மை குழு தலைவர் எம்ஜெஎஃப் லயன் பன்னீர் செல்வம் வரவேற்றார். கிளாசிக் லயன் சங்கம் அருள் செல்லதுரை மாவட்ட ஆளுநரின் அறிமுக உரையாற்றினார்.


மண்டல மாநாட்டை துவக்கி வைத்து தொடக்கவுரையாற்றிய மாவட்ட ஆளுநர் எம்ஜெஎஃப் லயன் சௌமா ராஜரத்தினம் பேசியதாவது:

இந்த மாவட்டத்தின் 4வது மண்டல மாநாடு இது. இந்த மாநாட்டை மண்டல தலைவர் சோமசுந்தரம் அமைதியாகவும், திட்டமிட்டதை திட்டமிட்ட நேரத்திலும் செய்து வருவது பாராட்டுக்குறியது. சேவை என்கிற ஒற்றை நோக்கோடு நாம் அனைவரும் சேர்ந்துள்ளோம். நல திட்டங்களை நாம்அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக செய்ய வேண்டும், ஒரு கோடி மதிப்பில் லயன் சங்கத்திற்காக செலவு செய்த அரவாக்குறிச்சி லயன்ஸ் சங்கத்தை பாராட்டுகிறேன் இவ்வாறு அவர் பேசினார்.

தலைமை தங்கிய மண்டல தலைவர் எம்ஜெஎஃப் லயன் இன்ஜினியர் சோம சுந்தரம் பேசியதாவது :

இந்த மண்டல மாநாடு மண்டலம் 4-ல் உள்ள வட்டார தலைவர்கள், மண்டலத்தில் உள்ள அனைத்து லயன்ஸ் சங்கங்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு செய்யப்பட்டுள்ளது. எதைசெய்தாலும் நான் அனைவரின் ஆலோசனையைப் பெற்றுதான் செய்வேன் இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி ராக்போர்ட் இன்ஸ்பெயர் லயன் சங்கத்தை சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்கோப் தொண்டு நிறுவனத்தின் தலைவர் சுப்புராமன் கௌரவிக்கப்பட்டார்.


திருச்சி ராக்போர்ட் இன்ஸ்பெயர் லயன் சங்கத்தை சேர்ந்த லயன் டாக்டர் சிவசங்கரி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கலைமாமணி கவிஞர் ம.முத்தையா சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

மாவட்ட ஆளுநர் சௌமா ராஜரத்தினம் கல்வியாளர், பண்பாளர், இவர் சௌமா விருதுகள் என்று இலக்கிய படைப்புகளுக்கு விருதுகளை வழங்கி வருகிறார். இந்த சௌமா விருதுகள் சாகித்திய அகாடமி விருதுகளைப் போன்று உயரிய விருதுகளாக பெருமை பெறும்.

சேவை என்பது ஒன்று தனியாக கிடையாது, வீட்டுக்கு ஆற்றுகின்ற கடமையை போல, நாம் நாட்டுக்கு ஆற்றுகின்ற கடமையே சேவையாகும்,

பிரதி பலன் எதிர்ப்பார்க்காமல், தன்னலம் கருதாது செய்கின்ற செயலே சேவையாகும், இந்த சங்கத்தினர் அனைவரும் பலனை எதிர் பார்க்காமலும், புண்ணியத்தை எதிர் பார்க்காமலும் சேவை செய்கின்றனர். இது பாராட்டுக்குறியது.

காலத்தை நாம் மதித்தால், காலம் நம்மை மதிக்கும் உயர்த இடத்துக்கு அழைத்து செல்லும் நேரம் தவறாமை என்பது மிகவும் முக்கியமானதாகும், லயன் சங்கத்தினர் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பது, அனைவரின் கடமை உணர்வை காட்டுகிறது. மனிதம் ஆண்டு என்கிற கொள்கை சிறந்த கொள்கை நம் அனைவரின் இதயத்திலும் ஏதோ ஒரு ஓரத்தில் மனிதம் மறைந்துள்ளது. அந்த மனிதத்தை நாம் அனைவரும் வெளியே கொண்டு வரவேண்டும்.

மண்டல தலைவர் சோமசுந்தரத்தின் தந்தை இங்கு இல்லாவிட்டாலும், அவர் தனது மகனின் சேவையை, எதையும் எதிர் பாராமல் செய்யும் பணியையும் இந்த மண்டபத்தில் இருந்து பார்த்து, பாராட்டி, வாழ்த்திக் கொண்டுதான் உள்ளார் இவ்வாறு அவர் பேசினார்.


உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் லயன் பிஎம்ஜெஎஃப் சேதுக்குமார், முதல் துணை ஆளுநர் எம்ஜெஎஃப் லயன் சேது சுப்ரமணியன், இரண்டாம் துணை ஆளுநர் பிஎம்ஜெ லயன் இயமவரம்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

மாவட்ட அவை செயலர் அறிக்கையை லயன் சமுத்திரம் வி.கணேஷ் வாசித்தார். மாவட்ட அவை பொருாளர் அறிக்கையை எம்ஜெஎப் லயன் கருப்புசாமி வாசித்தார். புகைப்பட கண்காட்சி விருதுகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் பிஎம்ஜெஎஃப் லயன் சாமிநாதன் வழங்கினார். விழா மதிப்பீட்டு உரையை முன்னாள் ஆளுநர் எம்ஜெஎஃப் ராமராஜூ வழங்கினார்.

கன்னிகா பில்டர்ஸ் அதிர்ஷ்ட பரிசு குலுக்கலில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு செல்போன், மிக்ஸி, கிரைண்டர், டெலிவிஷன் ஆகியவை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் மண்டல தலைவர்கள் புள்ளம்பாடி டாக்டர் பார்க்கவன் பச்சமுத்து, பொன்னமராவதி விஜயரங்கன், திருச்சி மாநகராட்சி எஸ்பி மணி, கே.கே.நகர் சோமசுந்தரம், பெரம்பலூர் இன்ஜினியர் ராஜாராம், ஜெயங்கொண்டம் சண்முகம், தஞ்சாவூர் முரளி, பாபநாசம் செல்வராஜ், எரவாச்சேரி, செல்வகுமார், மயிலாடுதுறை சதீஸ், திருவாரூர் தட்சிணா மூர்த்தி, மயிலாடுதுறை மதி, நாகப்பட்டினம் சையத் பக்ருதீன், குத்தாலம் ராஜா குமார், திருச்சி பாபு ஆகியோர் கலந்து கொண்டு தஞ்சை ஜிடி மண்டலம் தலைவர் தியாகராஜன் மாநாட்டு தலைவர் சோமசுந்த்திற்கு வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தனர்.


செயலாண்மை குழு செயலாளர் லயன் செந்தில்குமார் நன்றி கூறினார். திருச்சி பிரிமியர லயன் சங்கம் பற்குணன், திருச்சி சக்தி லயன் சங்கம் லயன் அபிராமி ஆகியோர் விழாவினை தொகுத்து வழங்கினர்.

Updated On: 27 Dec 2021 10:02 AM GMT

Related News