/* */

மணப்பாறையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் புகையிலை பொருட்கள் விற்ற இரண்டு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

மணப்பாறையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்
X

மணப்பாறையில்  குட்கா விற்பனை செய்த  இரண்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள ராஜமணி வெற்றிலை கடை மற்றும் காவல்காரன்பட்டியில் உள்ள ஆஞ்சநேயா மளிகை என்ற கடையிலும் தொடர்ந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ராஜமணி வெற்றிலை கடையில் 16.09.2021 அன்றும், காவல்காரன்பட்டியில் உள்ள ஆஞ்சநேயா மளிகை கடையில் 04.01.2022 அன்றும் ஆய்வில் அவர்களது கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டு பிடித்து ரூ.5000/- அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், அவர்கள் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு மீண்டும் 28.02.2022அன்று ஆய்வில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் இரண்டு கடைகளுக்கும் தலா ரூ.10,000/- அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், 28.02.2022 அன்று அவசர தடையாணை அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை, உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் சம்பந்தப்பட்ட இரண்டு கடைகளுக்கும் 9.03.2022-ல் அவசர தடையாணை உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் அந்த இரண்டு கடைகளுக்கும் இன்று திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு தலைமையில் சீல் வைத்தனர்.


Updated On: 11 March 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்