/* */

லால்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை தீர் கூட்டம்

லால்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

லால்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை தீர் கூட்டம்
X

லால்குடி ஆர்.டி.ஓ. வைத்தியநாதன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

லால்குடியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர். டி. ஓ. வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் லால்குடி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவத்திற்காக பகல் நேரங்களில் மட்டும் டாக்டர்கள் உள்ளனர்.அதேபோல் இரவு நேரத்திலும் மகப்பேறு மருத்துவமனை பகுதிக்கு டாக்டர்களை நியமிக்க வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையங்களில் கிராமப்புற பகுதிகளில் ரூ. 25-ம் நகர்புறம் பகுதிகளில் ரூ. 40 கொடுக்கின்றனர். அனைத்து இடங்களிலும் ஒரே நிர்ணய கட்டணம் நியமிக்க வேண்டும் மற்றும் அந்த இடத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் புகார் அளிக்கும் தொலைபேசி எண் ஆகியவற்றை டிஜிட்டல் போர்டு விவசாயிகளின் பார்வைக்காக வைக்க வேண்டும்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நெல் குவிண்டாலுக்கு 2500 ரூபாயும் கரும்புக்கு 4000 ரூபாயும் தருவதாக அறிக்கையில் கூறியது போல் பரிசீலினை செய்து வழங்க வேண்டும்

வாழை கொள்முதல் விவசாயிகளிடம் அரசாங்கமே வாழைத்தார்களை எடை போட்டு வாங்கி அதை சத்துணவில் கொடுப்பதற்காக நீண்ட நாள் கோரிக்கையாக கேட்டு வருகிறோம். அதை உடனடியாக செய்து தர வேண்டும்.

நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள கிளிக்கூடு இடையாற்று மங்கலம் பாலம் அமைத்து தந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பலன் அடைவதற்காக தமிழக அரசு விரைவாக முடித்துக் கொடுத்திட வேண்டும். சுற்றுலா தளமாக விளங்கும் கல்லணை மற்றும் அதற்கு அருகே உள்ள கூகூர் பகுதியில் மணல் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ் மாநில விவசாயிகள் சங்க பொதுக்குழு உறுப்பினர் சார்பில் மணிகண்டன் வலியுறுத்தி பேசினார்.

Updated On: 14 Sep 2022 12:55 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  2. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  3. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  4. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  6. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  7. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  10. வீடியோ
    தொடங்குகிறது பாதயாத்திரை Part 2 | அதிரவைக்கும் அதிரடி Plan | Annamalai...