/* */

வாக்கு எண்ணும் மையத்தில் யாருக்கு அனுமதி?- எவற்றை கொண்டு வரக்கூடாது-?

வாக்கு எண்ணும் மையத்தில் யாருக்கு அனுமதி என்பது குறித்து தூத்துக்குடி எஸ்.பி. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வாக்கு எண்ணும் மையத்தில் யாருக்கு அனுமதி?- எவற்றை கொண்டு வரக்கூடாது-?
X

வாக்கு எண்ணிக்கை அன்று பாதுகாப்பு பணி தொடர்பாக காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடைபெற்று. நாளை மறுநாள் (2ந் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் வ.உ.சி பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. இதுகுறித்து இன்று காவல்துறை அதிகாரிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது எஸ்பி பேசுகையில், தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வாக்கு எண்ணும் அறைக்குள் தேர்தல் பார்வையாளர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள், வாக்கு எண்ணும் உதவியாளர்கள், நுண் பார்வையாளர்கள், தேர்தல் பணியாற்றும் பொது ஊழியர்கள், சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் மைய முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்தல் பார்வையாளர்கள் தவிர கைபேசி, ஐ.பேட், மடிக்கணினி, ஒலி, ஒளிப்பதிவு செய்யக்கூடிய எந்த வகையான மின்னணு சாதனங்களையும் வாக்கு எண்ணும் அறைக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை.

தடைசெய்யப்பட்ட பொருட்களான தீப்பெட்டி, ஆயுதங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய எந்த வகையான பொருட்களையும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை. சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள், வாக்கு எண்ணும் மைய முகவர்கள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குரியவர்கள் பிரையண்ட் நகர் 8வது தெரு வழியாக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளின் நுழைவு வழியே உள்ளே மற்றும் வெளியே செல்லவும், ஓட்டப்பிடாரம் மற்றும் விளாத்திக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குரியவர்கள் பிரையண்ட் நகர் 9வது தெரு வழியாக அமைக்கப்பட்டு தடுப்பு வழியாக உள்ளே மற்றும் வெளியே செல்லவும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குரியவர்கள் கணேஷ்நகர் ஆரம்பத்தில் உள்ள நுழைவு வழியாக சென்று அங்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வழியாகவும், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்குரியவர்கள் கணேஷ்நகர் இறுதியில் உள்ள நுழைவுவாயில் வழியாக சென்று அங்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வழியாக உள்ளே மற்றும் வெளியே செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள வழிகளில் மட்டுமே செல்லமுடியும். அவ்வாறு வருபவர்களின் வாகனங்களை அந்தந்த நுழைவு வாயில் அருகே காவல்துறையினர் குறிப்பிடுமிடங்களில் நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேட்பாளர்கள் மற்றும் அவரது ஏஜெண்டுகள் வாக்கு எண்ணும் அறைக்கு பேனா, பேப்பர், எழுதுவதற்கான அட்டை மற்றும் 06.04.2021ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தவுடன் சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடி தலைமை அதிகாரியால் வழங்கப்பட்ட படிவம் நகல் (வாக்குச் சாவடியில் பதிவான மொத்த வாக்குகள் விபரம்) ஆகியவற்றை கொண்டு வர அனுமதி உண்டு. ஏஜென்டுகள் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் சம்மந்தப்பட்ட வேட்பாளர்களால் ஏஜென்ட் என நியமிக்கப்பட்டு வழங்கப்பட்ட கடிதம் ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அவர்களை வாக்கு எண்ணும் இடத்திற்கும் அனுமதிக்கப்படுவார்கள்.

முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்படும் அரசு ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், இவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்து பெருந்தொற்று இல்லை என்ற சான்றுடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரவேண்டும் அல்லது கோவிட் பெருந்தொற்று தடுப்பூசியை இருமுறை செலுத்தி, அதற்கான ஆவணத்துடன் வரவேண்டும் இல்லையெனில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வெற்றிக் கொண்டாட்டங்கள், பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளவாறு எதுவும் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் கணேஷ், தூத்துக்குடி ஊரகம் பொன்னரசு, விளாத்திக்குளம் பிரகாஷ், கோவில்பட்டி பொறுப்பு பழனிக்குமார், சாத்தான்குளம் காட்வின் ஜெகதீஷ்குமார், மாவட்ட குற்றப்பிரிவு பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், நிலமோசடி தடுப்பு சிறப்பு பிரிவு முருகவேல், ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல் ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 April 2021 11:28 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  2. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  3. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  5. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  6. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  8. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  9. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...