/* */

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஒரே ஏற்றுமதியில் 77.50 மீட்டர் நீளம் கொண்ட காற்றாலை இறகுகளை கையாண்டு புதிய சாதனை

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஒரே ஏற்றுமதியில் 77.50 மீட்டர் நீளம் கொண்ட காற்றாலை இறகுகளை கையாண்டு புதிய சாதனை
X

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஒரே ஏற்றுமதியில் 77.50 மீட்டர் அதிக நீளம் கொண்ட 24 மிகப்பெரிய காற்றாலை இறகுகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

199.9 மீட்டர் நீளம் உடைய 'எம்.வி. பேக் அல்கோர்' என்ற கப்பல் கடந்த 10-ந்தேதி தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பலின் ஹைட்ராலிக் பளுத்தூக்கி இயந்திரங்கள் மற்றும் துறைமுகத்தின் நகரும் பளுத்தூக்கி இயந்திரங்கள் மூலம் 77.50 மீட்டர் நீளம் உடைய 24 காற்றாலை இறகுகளும் பாதுகாப்பான முறையில் கையாளப்பட்டது. இக்கப்பலின் சரக்குகள் முழுவதும் மூன்று அடுக்குகளாக ஏற்றப்பட்டு, பின்பு வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து 13-ந்தேதி அமெரிக்காவின் அரன்சாஸ் துறைமுகத்திற்கு புறப்பட்டு சென்றது.

இந்த காற்றாலை இறகுகள் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வரை பிரத்தியோக லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு பின்னர், கப்பலில் ஏற்றப்பட்டது. இதற்கு முன்பு ஒரே ஏற்றுமதியில் 74.90 மீட்டர் நீளம் உடைய 84 காற்றாலை இறகுகளை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கையாண்டதே சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது 77.50 மீட்டர் நீளம் கொண்ட காற்றாலை இறகுகளை கையாண்டு மூலம் இதற்கு முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் இந்த நிதியாண்டு ஜீன் மாதம் வரை 423 காற்றாலை இறகுகள் மற்றும் கோபுரங்களை கையாண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 4462 காற்றாலை இறகுகள் மற்றும் கோபுரங்கள் கையாளப்பட்டுள்ளது.

Updated On: 14 Jun 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ரத்த தான முகாம்