/* */

தூத்துக்குடியில் பிடிபட்ட வெளிநாட்டு கடத்தல்காரர் புழல் சிறையில் அடைப்பு..!

தூத்துக்குடியிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை செல்வதற்காக தூத்துக்குடியில் உள்ள பிரபல ஓட்டலில் தங்கியுள்ளார்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் பிடிபட்ட வெளிநாட்டு கடத்தல்காரர் புழல் சிறையில் அடைப்பு..!
X

தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் முத்தரையர் கடற்கரை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு நபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக சுற்றி வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று‌ அங்கு சுற்றிக் கொண்டு இருந்தவரை மடக்கி பிடித்து கியூ பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிடிபட்டவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன்(47) என்பது தெரியவந்தது. இவர் இந்திய வாழ் வெளி நாட்டினருக்கான, ஓ.சி.ஐ. அட்டை வைத்திருந்தார். இது தவிர 2 இங்கிலாந்து பாஸ்போர்ட், ஒரு‌ இந்திய பாஸ்போர்ட்டு மற்றும் இந்திய, இலங்கை பணமும் வைத்திருந்தார். கோவாவில் இருந்து விமானம் மூலம் பெங்களுருக்கு வந்த அவர், பின் அங்கிருந்து வாடகை கார் மூலம் கடந்த 9-ந் தேதி தூத்துக்குடிக்கு வந்து உள்ளார். தூத்துக்குடியிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை செல்வதற்காக தூத்துக்குடியில் உள்ள பிரபல ஓட்டலில் தங்கியுள்ளார். இதற்காக கடற்கரையில் நின்றபோது கியூ பிரிவு போலீசாரிடம் பிடிபட்டுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை மற்றும் கோவா பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 226 கிலோ கேட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் ஜோனாதன் தோர்ன் கைது செய்யப்பட்டு உள்ளார். இதற்காக 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஜோனாதன் தோர்ன், பின்னர் பரோலில் வெளியில் வந்துள்ளார். இவர் இதுவரை தாய்லாந்து, வியட்நாம், பாங்காக், சீனா, ஆப்பிரிக்கா உள்பட 60 நாடுகளுக்கு சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து கியூபிரிவு போலீசார் ஜோனாதன் தோர்ன் மீது பாஸ்போர்ட் முறைகேடு வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி எம்.ராஜகுமரேசன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சென்னை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்காக, நள்ளிரவே அவர், சென்னை கொண்டு செல்லப்பட்டு இன்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு நீதிபதியின் விசாரணைக்கு பின்னர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜோனாதன் தோர்ன், சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டவர் என்பதால் அவர்மீது வேறெந்த நாடுகளிலும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதா? அவருடன் தொடர்பிலிருக்கும் போதை கும்பல்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறித்து கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Updated On: 13 Jun 2021 3:44 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?