/* */

டாஸ்மாக் திறப்பதற்கு எதிர்ப்பு - தூத்துக்குடியில் பாஜக ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி-பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தனது வீட்டு முன்பு மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

டாஸ்மாக் திறப்பதற்கு எதிர்ப்பு - தூத்துக்குடியில் பாஜக ஆர்ப்பாட்டம்
X

டாஸ்மாக் திறப்பதற்கு எதிர்ப்பு - தூத்துக்குடியில் பாஜக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் முழு ஊரடங்கு 14-6-2021 முதல் 21-6-20021 காலை 6-00 மணி வரை ஒரு வாரத்துக்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று அதிகம் பாதித்துள்ள 11 மாவட்டங்களை தவிர 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அரசியல் கட்சிகளிடையே இது தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.

இந்த ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்னரே பாமக தலைவர் ராமதாஸ், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில், தற்போது மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியுள்ள அரசின் முடிவை எதிர்த்து பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நேற்று கண்டனம் தெரிவித்தார்.

மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அவரவர் வீடுகள் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிவித்தார். அதனைத்தொடர்ந்து, இன்று பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் டூவிபுரத்தில் உள்ள தனது வீடு முன்பு தனது குடும்பத்தினருடன் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கடந்த ''அதிமுக ஆட்சியின் போது அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த முக.ஸ்டாலின் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என அதிமுக அரசை எதிர்த்து அப்போது வீடுகள் முன்பு கொரோனா பரவல் நேரத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தார். இந்நிலையில், தற்போது நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படுவதால் தற்போது குறைந்துள்ள கொரோனா தொற்றானது அதன் மூலம் அதிகரிக்கும் எனவே முதல்வர் இம்முடிவை பரீசீலனை செய்ய வேண்டும் என்றார்.

இதில், மாவட்ட செயலாளர் மான்சிங், கிழக்கு மண்டல தகவல்தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Jun 2021 7:58 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  3. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  4. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
  5. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  7. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  8. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு
  9. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  10. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?