/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்

குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா என்ற கடுமையான சுவாசநோயை தடுக்கும் வகையில், நியூமோகாக்கஸ் தடுப்பு மருந்து உலகளாவிய நோய் தடுப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்
X

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜூலை 23) முதல் குழந்தைகளுக்கு நியுமோகோக்கஸ் தடுப்பூசி போடப்படும் என மாவட்ட ஆட்சியர் க. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா என்ற கடுமையான சுவாசநோயை தடுக்கும் வகையில், நியூமோகாக்கஸ் தடுப்பு மருந்து உலகளாவிய நோய் தடுப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா என்ற கடுமையான சுவாசநோயை தடுக்கும் வகையில், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசியை பெற்று, நலமோடு வாழ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தற்பொழுது குழந்தைகளுக்கு முதல் தவணையாக 6வது வாரமும் 2வது தவணையாக 14வது வாரமும் ஊக்குவிப்பு தவணையாக 9வது மாதத்திலும் வழங்க உலகளவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜுலை 13-ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் முன்னிலையில் சென்னையில் தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளது.

தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் (23.07.21) மாவட்ட ஆட்சியரால் துவக்கி வைக்கப்படுகிறது. மாதந்தோறும் சுமார் 1800 குழந்தைகள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் துணை சுகாதார நிலையங்களிலும் மற்றும் களப்பணியில் உள்ள கிராம சுகாதார செவிலியர் மூலம் அங்கன்வாடி மையத்தில் வைத்து தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசியை பெற்று நலமோடு வாழ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 July 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?