/* */

பயின்ற பள்ளிக்கு சொந்த செலவில் விளையாட்டு மைதான மேடை.. முன்னாள் ராணுவ அதிகாரி அசத்தல்..

தூத்துக்குடியில் தான் பயின்ற பள்ளிக்கு சொந்த செலவில் முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் விளையாட்டு மைதான மேடை அமைத்து கொடுத்துள்ளார்.

HIGHLIGHTS

பயின்ற பள்ளிக்கு சொந்த செலவில் விளையாட்டு மைதான மேடை.. முன்னாள் ராணுவ அதிகாரி அசத்தல்..
X

விளையாட்டு மைதான மேடையை உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடங்ளை மேம்படுத்த அந்தந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளியில் பயின்று நல்ல நிலையில் உள்ளவர்கள் முன்வர வேண்டும் என அரசுத் தரப்பில் சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏராளமான பள்ளிகள் சீரமைக்கப்பட்டன.

அதன் ஒருபகுதியாக, "எங்கள் ஊர்: எங்கள் பள்ளிக்கூடம்" என்பதை நோக்கமாகக் கொண்டு அந்தப் பள்ளிக் கூடத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த முன்வந்து பல்வேறு பணிகளை செய்துள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரியான கர்னல் சுந்தரம்.

தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம். இவர், தற்போது தூத்துக்குடி கோக்கூர் பகுதியில் வசித்து வருகிறார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்டு வரும் சுந்தரம் ஜெயன்ட் குரூப் ஆப் தூத்துக்குடி என்ற அமைப்பில் இயக்குநர் பொறுப்பிலும், தூத்துக்குடி மாவட்ட முப்படை வீரர் வாரியத்தில் உபதலைவர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.

இந்த நிலயைில், முன்னாள் ராணுவ அதிகாரியான கர்னல் சுந்தரம், தனது சொந்த செலவில் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்பில், தான் படித்த முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தின் அருகே ஒரு மேடையை அமைத்துக் கொடுத்து உள்ளார்.

இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் சுந்தரம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி புறநகர் உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் கலந்து கொண்டு விளையாட்டு மைதான மேடையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசும்போது: மாணவர்கள் போதை பொருட்களுக்கும், செல்போனுக்கும் அடிமை ஆகாமல், கல்வியிலும் ஒழுக்கத்திலும் தங்களை ஒருங்கிணைத்து வாழ்வில் முன்னேற வேண்டும் என அறிவுறை கூறினார். நிகழ்ச்சியில், ஜெயன்ட் குழும பொறுப்பாளர்கள் ஜெயகிருஷ்ணன், ராஜதுரை, வழக்கறிஞர் சொர்ணலதா, தொழிலதிபர் கிருஷ்ணவேணி, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை கிறிஸ்டி எப்சிபா, ஜெயன்ட் குழும உறுப்பினர்கள் ஜெயபால் ஆலிவா, பால் பெர்ணான்டோ, களி ஆனந்தகுமார், ரத்தின சேகர், பேராசிரியர் சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் சுந்தரம் கூறியதாவது:

எனது தந்தை மாடசாமி ராணுவத்தில் பணியாற்றியபோது இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றார். பர்மாவில் அவர் சிக்னல்மேன் பணியில் இருந்தார். அதன் பிறகு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி பல்வேறு பதவிகளுக்கு உயர்ந்து கர்னல் பதவியை பெற்றேன்.

தூத்துக்குடி ஜெயன்ட் குழுமத்துடன் இணைந்து ஆண்டுதோறும் முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி வருகிறோம். இந்தப் பள்ளியின் நூலகத்துக்கு ரூ. 38 ஆயிரம் செலவில் தரைதளத்தை புதுப்பித்து கொடுத்துள்ளோம்.

கொரோனா பரவல் காலத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள், வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கினோம். தற்போது, 2 லட்சம் ரூபாய் செலவில் விளையாட்டு மைதான மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில், எனது பங்களிப்பாக ஒரு லட்சம் ரூபாயும், லண்டன் வங்கியில் பணியாற்றி வரும் எனது மகன் பாலாஜி சுந்தரம் பங்களிப்பாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கினோம்.

சொந்த ஊருக்கும், என்னை ஆளாக்கிய முடிவைத்தானேந்தல் அரசுப் பள்ளிக்கும் எந்த உதவியாக இருந்தாலும் தொடர்ந்து செய்வேன் என கர்னல் சுந்தரம் தெரிவித்தார்

Updated On: 20 Nov 2022 7:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’