/* */

கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரியில் வேளாண் வளர்ச்சித் திட்ட மண்டல ஆய்வுக் கூட்டம்…

தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரியில் வேளாண் வளர்ச்சித் திட்ட மண்டல ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரியில் வேளாண் வளர்ச்சித் திட்ட மண்டல ஆய்வுக் கூட்டம்…
X

கனிமொழி எம்.பி.க்கு அம்மன் சிலையை துணை வேந்தர் கீதாலட்சுமி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்த மண்டல ஆய்வுக் கூட்டம், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்றது.

தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தை தொடங்கி வைத்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசியதாவது:

விவசாயம்தான் நாட்டின் ஆணிவேர். கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் இருக்கக் கூடிய அனைத்து தொழிற்சாலைகளையும் மூடிவிட்டார்கள். ஆனால், மூடப்படாத ஒரு தொழிலாக இருந்தது விவசாயம் மட்டும்தான். அதனால்தான் 'சுழன்றும் ஏர் பின்னது உலகம்"; என்று வள்ளுவர் கூறி உள்ளார்.

விவசாயம் இல்லையென்றால் யாருமே இல்லை, எதுவுமே இல்லை. ஆனால் விவசாயிகள் இன்று எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதையும், அவர்களின் பிரச்சனைகளையும் நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம். காலநிலை மாற்றத்திற்கேற்ப விவசாயிகளை தயார் செய்ய வேண்டும். விவசாயத்திற்கு தேவையான ஆராய்ச்சிகளை நாம் செய்ய வேண்டும். இன்றைய பருவநிலை, மழை உள்ளிட்டவற்றை தாங்கக்கூடிய பயிர்கள் இந்த ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேளாண்மைக்கு முக்கியத்துவம் தந்து கிராமங்களில் விவசாயத்திற்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என்பதற்காக கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தினை கொண்டு வந்து உள்ளார்.

இந்தத் திட்டத்தில் கிராமங்களை தேர்ந்தெடுத்து அந்த கிராமங்கள் வேளாண்மை துறையில் வளர்ச்சி பெற்ற கிராமமாக மாற்றுவதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. குறிப்பிட்ட பகுதியில் எந்த பயிர்களை பயிரிட வேண்டும் என்பதையும், தண்ணீர் குறைவாக தேவைப்படும் பயிர்களை பயிரிட வேண்டும் என்பதையும் அறிந்து அதற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

விவசாயத்தில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருக்கக்கூடிய நிலையை நாம் உருவாக்கி காட்ட முடியும். உலகம் முழுவதும் இருக்கக்கூடிய முக்கியமான உணவு பொருள் அரிசி ஆகும். மேலும், அதையும் தாண்டி சோளம், கம்பு, வரகு, சாமை இதையெல்லாம் நோக்கி மக்கள் சொன்று கொண்டிருக்கிற சூழ்நிலையில் அவற்றிற்கும் முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

விவசாயிகளாகிய நீங்கள் அளிக்கும் ஒத்துழைப்பில்தான் இந்த திட்டத்தினை சிறப்பாக முன்னெடுத்து செல்ல முடியும். விவசாயத்தை முன்னேற்றி மற்றொரு தளத்திற்கு எடுத்து செல்லும் முயற்சியில் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.

கூட்டத்தில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்கண்டேயன் (விளாத்திக்குளம்), சண்முகையா (ஓட்டப்பிடாரம்), தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, வேளாண்மை இயக்குநர் அண்ணாதுரை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் நடராஜன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலெட்சுமி, கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதல்வர் தேரடிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கனிமொழி எம்.பி.க்கு அம்மன் சிலை பரிசு: நிகழ்ச்சியின்போது, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அப்போது, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு மரத்தினால் செய்யப்பட்ட அம்மன் சிலையை பரிசாக அளித்தார்.

கனிமொழிக்கு பரிசு அளிக்க அம்மன் சிலை மேடைக்கு கொண்டு வரப்பட்டதும், பெரியாரியவாதியான கனிமொழி அந்த சிலையை எப்படி வாங்குவார்? என மேடையில் இருந்தோர் அச்சமடைந்தனர். இருப்பினும், எந்தவித சலனத்தையும் முகத்தில் காட்டாமல் சிறிய புன்முறுவலோடு அம்மன் சிலையை கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார்.

Updated On: 25 Nov 2022 1:06 PM GMT

Related News

Latest News

  1. சூலூர்
    பண அரசியலை கோவையில் இருந்து ஓட்டியாக வேண்டிய நேரம் : அண்ணாமலை
  2. வீடியோ
    🔴LIVE : ராமநாதபுரத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா | Roadshow...
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 29 கன அடியாக அதிகரிப்பு
  4. அரசியல்
    மோடிக்கு ஓட்டு சேகரிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அலுவலக பதற்றமா? மன அழுத்தத்தை சமாளிக்க 3 உணவுகள்
  6. வீடியோ
    🔴LIVE : அண்ணாமலையின் அனல் பறக்கும் பிரச்சாரம் | அலைகடலென திரண்ட கோவை...
  7. சேலம்
    மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  8. இந்தியா
    தேர்தல் பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்: பிரதமர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  10. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 1,060 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு...