/* */

பிரதமரின் உதவித் தொகை பெறும் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. தூத்துக்குடி ஆட்சியர் தகவல்…

பிரதமர் உதவித்தொகை திட்டத்தில் பயன்பெறும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் உடனடியாக ஆதார் எண் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பிரதமரின் உதவித் தொகை பெறும் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. தூத்துக்குடி ஆட்சியர் தகவல்…
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும், நாடு முழுவதும் உள்ள ஏழை விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் உதவித் தொகை திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்தத் தொகை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே, இந்தத் திட்டத்தில் விவசாயிகள் என்ற பெயரில் போலியாக யாரேனும் பதிவு செய்து உதவித் தொகையை பெற்றுவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

பிரதமரின் உதவித் தொகை திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

பிரதம மந்திரியின் உதவித் தொகை திட்டம் (பி.எம். கிசான்) மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ. 6ஆயிரம் வேளாண் இடு பொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் 72 ஆயிரத்து 475 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதுவரை விவசாயிகள் இந்த் திட்டத்தில் சேர்ந்த தேதியினை பொறுத்து விவசாயிகளுக்கு 12 தவணை வரை தொகைகள் வரப்பெற்றுள்ளது.

மின்னணு முறையில் உங்கள் வாடிக்கையாளரை அல்லது விவசாயியை தெரிந்து கொள்ளுங்கள் என்பதன் சுருக்கமே இ-கே ஓய் சி என்று அழைக்கப்படுகிறது. பி.எம்.கிசான் திட்டத்தில் இ- கே ஓய் சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தற்போது பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ விவசாயிகள் தொடர்ந்து தவணைத் தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விபரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும்.

அதற்கான முதல் வழிமுறை தங்களது ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் (www.pmkisan.gov.in) தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து ஒ.டி.பி மூலம் சரிபார்ப்பு செய்யலாம்.

இரண்டாம் வழிமுறை ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையங்களின் மூலம் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து தங்களது விரல் ரேகை பதிவு செய்து விபரங்களை சரிபார்ப்பு செய்யலாம். அதற்கான கட்டணமாக ரூ. 15 பொது சேவை மையங்களுக்கு வழங்க வேண்டும்.

இந்த இரண்டு வழிமுறைகளில் ஏதெனும் ஒரு முறையில் பயனாளிகள் தங்கள் ஆதார் விபரங்களை நவம்பர் 30 ஆம் தேதிக்குள் திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 17 Nov 2022 2:57 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?