/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் கொடிநாள் நிதியாக ரூ. 1.55 கோடி வசூலிக்க இலக்கு...

தூத்துக்குடி மாவட்டத்தில் கொடிநாள் நிதியாக நடப்பு ஆண்டில் ரூ. 1.55 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் கொடிநாள் நிதியாக ரூ. 1.55 கோடி வசூலிக்க இலக்கு...
X

முன்னாள் படைவீரரின் குழந்தைக்கு கல்வி உதவித்தொகையை ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான படைவீரர் கொடிநாள் வசூலை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று தனது முகாம் அலுவலகத்தில் துவக்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற படைவீரர் கொடி நாள் தேநீர் விருந்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசியதாவது:

தமிழ்நாட்டிலே வேலூர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக அதிகமாக ராணுவத்தில் பணியாற்றிய நபர்கள் உள்ள மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம்தான். அதுபோல அதிகமாக சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட தியாகிகளை கொண்ட மாவட்டமும் தூத்துக்குடி மாவட்டம் தான்.

எனவே, ராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கு என்னென்ன தேவைகள் என்பதை மாவட்ட நிர்வாகம் அறிந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து கொண்டு வருகிறது. கொடி நாள் என்பது, ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களும் அது தங்களது கடமை என்று கடைபிடிக்கின்றார்கள்.

நமக்காகவும், நமது நாட்டிற்காகவும் எல்லைகளில் பாடுபட்டுக் கொண்டிருக்கும் ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கும் அவர்களது பிள்ளைகளுக்காகவும் தான் நாம் இந்த கொடிநால் வசூலை செய்து வருகின்றோம். தூத்துக்குடி மாவட்டத்திலும் முன்னாள் படை வீர நல சங்கத்தை சார்ந்தவர்கள் பல்வேறு நலன்களை படைவீரர்களின் குடும்பத்திற்காக செய்து கொண்டு இருக்கிறார்கள்.

படைப் பணியில் இருந்து ஓய்வு பெற்று வரும் முன்னாள் படை வீரர்களுக்கு பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் படைப் பணியில் இருந்து ஓய்வு பெற்று வரும் முன்னாள் படை வீரர்களுக்கு பெயர் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு பிரிவில் வேலை வாய்ப்புக்காக முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் படை வீரர் மாநில அரசில் வேலைவாய்ப்பு பெறாத சூழ்நிலையில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்புக்காக, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதியத்தக்க முன்னுரிமை சான்றும் வழங்கப்பட்டு வருகிறது.

கொடிநாளின் போது பொதுமக்களிடம் இருந்து திரட்டப்படும் நிதியானது போரில் வீரமரணம் அடைந்த படை வீரர்களின் கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலனுக்காகவும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் கைம்பெண்கள் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட பயன்பட்டு வருகின்றது.

தற்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் 4086 முன்னாள் படைவீரர்களுக்கும், 1923 கைம்பெண்களுக்கும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலமாக அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டுக்கான படைவீரர் கொடிநாள் வசூல் தொகையாக ரூ.1,01,23,156 ரூபாயும், மாநகராட்சி சார்பில் ரூ. 10,01,000 ரூபாயும் வசூல் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான மாவட்ட இலக்காக ரூ. 1,44,86,000 ரூபாயும், மாநகராட்சி இலக்காக ரூ. 10,49,000 ரூபாயும் என மொத்தம் ஒரு கோடியே 55 லட்சத்து 35000 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதை நாம் எட்டுவதற்கு அனைத்து மாவட்ட அலுவலர்களும் கொடி நாள் நிதியினை திரட்டிட அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள் என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார், முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குநர் தெய்வசிகாமணி, முன்னாள் படைவீரர் நல வாரிய உப தலைவர் கர்னல் சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Dec 2022 2:16 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?