/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்:கலெக்டர்

தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியில்லாமல் செயல்படும் கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்:கலெக்டர்
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ள விவரம் வருமாறு:

நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண். 76இ வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நாள். 14.06.2018-ல் வெளியிடப்பட்டன.

இந்தத் திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் 14.06.2018 முதல் 13.09.2018 வரை மூன்று மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இசைவு வழங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ரிட் மேல்முறையீட்டு மனுக்கள் எண் மற்றும் பலவற்றில் வழங்கப்பட்டு உள்ள 10.02.2021 தேதிய தீா்ப்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நீதிமன்ற உத்தரவின்படி 22.03.2021 முதல் 04.04.2021 வரை இருவார காலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மீண்டும் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மேலும் ஆறு மாத காலம் கால நீட்டிப்பு அரசால் 24.06.2022 முதல் 31.12.2022 வரை வழங்கப்பட்டது.

தற்பொழுது இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பாக 30.06.2023 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. விண்ணப்பித்தவர்கள் உரிய விபரங்களை சமர்ப்பித்து இசைவு பெற சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகலாம். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://tcp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.

இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 15 March 2023 7:22 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    இசையில் மயங்கியதால் தொட்டியம் வந்தடைந்த மதுரை காளியம்மன் வரலாறு
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  3. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  4. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  5. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  6. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  7. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  8. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  9. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  10. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு