/* */

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் இணையதளத்தில் விவசாயிகளின் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு விவரம் வருமாறு:

தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண் அடுக்கு திட்டம் வேளாண்மை துறையால் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட தங்கள் கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி விவசாயிகளின் ஆதார் எண், விவசாயியின் புகைப்படம், வங்கி கணக்குஎண் விவரங்கள் மற்றும் நிலஉரிமை ஆவணங்களுடன் சென்று GRAINS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அவ்வாறு பதிவேற்றம் செய்யும் போது நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயியின் விவரம் அடிப்படையில் GRAINS (Grower Online Registration of Agricultural Input System) ) என்ற இணையதளத்தில் சேகரிக்கப்பட்டு வேளாண்மை - உழவர் நலத்துறை, பேரிடர் மேலாண்மைதுறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, பட்டுவளர்ச்சித் துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரகவளர்ச்சி துறை, கால்நடை பராமரிப்புதுறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதைசான்றளிப்புத் துறை, வருவாய்த் துறை மற்றும் சர்க்கரை துறை ஆகிய துறைகளின் திட்டங்களில் பயனடைய பயன்படுத்தப்படுகிறது.

மேலும், GRAINS வலைதளத்தின் மூலம் அரசின் நன்மைகள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்திட முடியும். இது ஒற்றை சாளர (Single Window Portal) வலைதளமாக செயல்படுவதால் விவசாயிகள் அனைத்து துறைசார்ந்த திட்டங்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு முறையும் அரசின் திட்டங்களில் பயன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது தனித்தனியாக ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது இல்லை. விவசாயிகள் இதுவரை அரசிடம் இருந்து பெற்ற நன்மைகளை முழுமையாக இந்த வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் துறைசார்ந்த திட்டங்களுக்கு விவசாயிகளின் அடிப்படை விவரங்கள் மற்றும் பயிர் விவரங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ற பயன்களை அளிக்க முடியும், மற்றும் நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் நேரடி பணப் பரிமாற்றம் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும்.

வேளாண் அடுக்கு திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி GRAINS என்ற வலைதளத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் ஆதார் எண், விவசாயியின் புகைப்படம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், நில உரிமை ஆவணங்களுடன் சென்று பதிவு செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 March 2023 1:19 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  2. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  3. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  5. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  6. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  7. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  10. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்