/* */

கடற்கரையில் தூர்வாறும் பணி: கனிமொழி எம்பி, அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆய்வு

தூய்மையான தூத்துக்குடி திட்டம் திரேஸ்புரம் கடற்கரையில் தூர்வாறும் பணி : கனிமொழி எம்பி, அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆய்வு.

HIGHLIGHTS

கடற்கரையில் தூர்வாறும் பணி: கனிமொழி எம்பி, அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆய்வு
X

தூய்மையான தூத்துக்குடி திட்டத்தின்கீழ் தூர்வாறும் பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தூய்மையான தூத்துக்குடி திட்டத்தின்கீழ் தூர்வாறும் பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்பி கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தூய்மையான தூத்துக்குடி என்ற திட்டத்தின் மூலம் மாநகராட்சியின் மூலம் கடந்த ஒரு வாரமாக கால்வாயில் மண் அதிகமாக தேங்கியுள்ள பகுதிகளில் துப்புரவு பணியாளர்களின் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் 12 ஜே.சி.பி. உதவியுடன் 200 பணியாளர்கள் சுத்தம் செய்து வருகிறார்கள். மழைக்காலம் வர இருப்பதால் பக்கிள் ஓடை வழியாகத்தான் தண்ணீர் கடலுக்கு செல்லும், பக்கிள் ஓடையை சுத்தம் செய்வதன் மூலம் மழை காலத்தில் மண் அடைப்பு ஏதும் இல்லாமல் தண்ணீர் முழுவதுமாக வெளியேறிவிடும். இந்த முழு வாரமும் தூய்மையான தூத்துக்குடி திட்டத்தின் கீழ் நீர்வழி பாதைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு மாநகராட்சி பகுதியில் சுமார் 5000 நபர்களின் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. எதிர் வரும் மழை காலங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்காமல் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி நிர்வாகபொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி பொறியாளர் சரவணன், முக்கிய பிரமுகர் ஜெகன் பெரியசாமி, ஜீவன் மற்றும் அலுவலர்கள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 26 Sep 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்