/* */

பாஜக சார்பில் "இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்" புதிய திட்டம் தூத்துக்குடியில் அறிமுகம்!!

தூத்துக்குடியில் பாஜக சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்" புதிய திட்டத்தை மாநில செயலாளர் உமாரதி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

பாஜக சார்பில் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் புதிய திட்டம் தூத்துக்குடியில் அறிமுகம்!!
X

பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் "இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்" என்ற புதிய திட்டம் கொண்டு அறிமுகபடுத்தபட்டுள்ளது. அதன்படி பாஜகவை சார்ந்த ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் அவர்கள் சார்ந்த பகுதிகளில் உள்ள 25 வீடுகளில் அவர்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் மூலமா பயன் அடைந்து இருக்கிறார்களா? அல்லது அவர்களுக்கு மத்திய அரசின் திட்டங்களில் என்ன என்ன தேவைகள் இருக்கின்றன என கண்டறிந்து அவர்களுக்கு அந்த திட்டங்களை கிடைக்க உதவி செய்ய வேண்டும்.


இதனால் பொது மக்கள் அரசு சார்ந்த பல பணிகளையும் சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகிகள் மூலம் கிடைக்க பெற்று பயன் அடைவார்கள். இந்த திட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள் பாஜக தலைமையின் ஆணையின்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு மாநில நிர்வாகிகள் சென்று பாஜக நிர்வாகிளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். தூத்துக்குடியில் இந்த பயிற்சியை பாஜக மாநில செயலாளர் உமாரதி தொடங்கி வைத்தார். அதில் மாவட்ட தலைவர் பால்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், கோட்ட இணை பொருப்பாளர் ராஜா மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கிழக்கு மண்டல தலைவர் சந்தணக்குமார் வழிகாட்டுதலின் படியும் இன்று கிழக்கு மண்டலம் 148வது பூத் ராஜபிள்ளை சந்து பகுதியில் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் நிகழ்வின் மூலம் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்தார்கள். இந்நிகழ்வில் கிழக்கு மண்டல பொதுச்செயலாளர் சவுந்திரராஜன், செய்தி மற்றும் ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 July 2021 1:16 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  9. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  10. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்