/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அரசு செயலாளர் ஆய்வு...

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அரசு செயலாளர் ஆய்வு...
X

தூத்துக்குடி மாவட்டம், சின்னமலைக்குன்று கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டாரம், சின்னமலைக்குன்று வருவாய் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட தரிசு நிலத் தொகுப்பு மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில், தமிழக வேளாண் உற்பத்திஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் சமயமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.


ஆய்வு குறித்து வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி கூறியதாவது:

சின்னமலைக்குன்று கிராமத்தில் 10 முதல் 15 ஏக்கர் கொண்ட தரிசு நிலத் தொகுப்புகள் நான்கு எண்ணங்கள் உருவாக்கப்பட்டு தற்சமயம் இரண்டு எண்ணங்கள் அரசு நிதிஉதவியுடன் முற்புதர்கள் அகற்றப்பட்டு பயிர் சாகுபடிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. சின்னமலைக்குன்று கிராமத்தில் தமிழக அரசின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் மூலம் தரிசாக பயன்படுத்தப்படாமல் இருந்த 61 ஏக்கர் நிலத்தில் தற்போதுவிவசாயிகளால் உளுந்து, மக்காச்சோளம் மற்றும் கம்பு பயிர்கள் 13 ஏக்கரில் பயிரிடப்பட்டு அவர்களது வருவாய்க்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தரிசு நிலத் தொகுப்புகளில் திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் பண்ணைக் குட்டைகள் அரசு நிதியுதவியுடன் அமைத்தும் நீர் ஆதாரங்களை பெருக்கி தரிசு நிலங்களை தொடர் சாகுபடிக்கு கொண்டுவரவும் லாபம் தரும் பழமரக்கன்றுகளான கொய்யா, நெல்லி, எலுமிச்சை போன்றவற்றை நடவு செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க இந்தத் திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு செயலாளர் சமயமூர்த்தி தெரிவித்தார்.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் வேளாண்மைமற்றும் உழவர் நலத்துறை சார்பாக இலவசமாக தென்னங்கன்றுகள், மானிய விலையில் விசைத்தெளிப்பான்கள் ஆகியவற்றையும், தோட்டக்கலைத் துறை சார்பாக பழமரக்கன்றுகள் மற்றும் காய்கறிவிதைகள் ஆகியவற்றையும் விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பழனிவேலாயுதம், மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (வேளாண்மை) நாச்சியாரம்மாள், வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) பாலசுப்பிரமணியன், வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) சாந்திராணி, வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சிநிலையம்) மனோரஞ்சிதம், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் கிளாட்வின் இஸ்ரேல், வேளாண்மைதுணை இயக்குநர்(வேளாண் வணிகம்) முருகப்பன் மற்றும் தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2023 4:59 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்