/* */

தூத்துக்குடியில் டிச. 10ஆம் தேதி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தொடக்கம்..

தூத்துக்குடியில் 30 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் டிச. 10ஆம் தேதி  தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தொடக்கம்..
X

தூத்துக்குடியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வரவேற்பு குழு கெளரவத் தலைவர் சாந்தகுமாரி செய்தியாளர்களிடம் பேசினார்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடப்பு ஆண்டில் தூத்துக்குடியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்து, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வரவேற்பு குழு கெளரவ தலைவர் மற்றும் அரசு கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் சாந்தகுமாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை (DEPARTMENT OF SCIENCE & TECHNOLOGY), தேசிய அறிவியல் தொழில் நுட்ப பரிமாற்றக் குழுவுடன் (National Council for Science & Technology Communication) இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 30 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தி வருகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டு "ஆரோக்கியம் மற்றும் நலவாழ்விற்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்வது" என்ற தலைப்பில் குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு வருகிற10 மற்றும் 11 ஆம் தேதிகளில், தூத்துக்குடி அருகே உள்ள மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் 10 முதல் 17 வயது வரையிலுள்ள மாணவர்கள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் இருந்து மாவட்ட அளவில் தேர்வு செய்து 550 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்க உள்ளனர். சுமார் 1000 குழந்தை விஞ்ஞானிகள், 500 வழிகாட்டி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என 1500 பேர் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

மாநில மாநாடு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. மாநாட்டின் சிறப்பு விருந்தினர்களாக சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையிலும், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன், சசிகுமார், பூச்சியியல் விஞ்ஞானி தினகரன், அறிவியல் இயக்க மாநிலப் பொதுச் செயலாளர் சுப்ரமணி, மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அண்ணாத்துரை, எழுத்தாளர் விழியன், மதர் தெரசா பொறியியல் கல்லூரியின் இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன் உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

மாநாட்டில், ஆய்வறிக்கை சமர்ப்பித்தல், விஞ்ஞானிகளுடன் குழந்தைகள் கலந்துரையாடல், ஆசிரியர்களுக்கு சிறப்பு அமர்வு, எளிய அறிவியல் பரிசோதனை, கணக்குப் இனிக்கும், எழுத்தாளர்களுடன் சந்திப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநர் சுதன் இணைய வழியாக பங்கேற்று உரையாற்றுகிறார். பங்கேற்கும் 550 ஆய்வுக் கட்டுரைகளில் சிறந்த 30 ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். அந்த கட்டுரையாளர்கள் டிசம்பர் 26 முதல் 30 ஆம் தேதி வரை அகமதாபாத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வறிக்கை சமர்பிக்க உள்ளனர் என அரசு கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் சாந்தகுமாரி தெரிவித்தார்.

பேட்டியின்போது, அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர்கள் பாலகிருஷ்ணன், ஸ்டீபன் நாதன், தியாகராஜன், மாவட்ட செயலாளர் சுரேஷ் பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 8 Dec 2022 5:39 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  2. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  3. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  5. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  6. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  8. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  9. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...