தூத்துக்குடியில் வட மாநில தொழிலாளர்கள் திடீர் வேலை புறக்கணிப்பு போராட்டம்

Workers Strike -தூத்துக்குடியில் வட மாநில தொழிலாளர்கள் திடீர் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தூத்துக்குடியில் வட மாநில தொழிலாளர்கள் திடீர் வேலை புறக்கணிப்பு போராட்டம்
X

தூத்துக்குடி பஸ் நிலையத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வட மாநில  தொழிலாளர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

Workers Strike -தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி என பல நகரங்களிலும் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த பணிகளில் பெரும்பாலும் வட மாநில தொழிலாளர்களே அதிக அளவில் பணிபுரிந்து வருகிறார்கள். இது மட்டுமல்ல தமிழகத்தில் நடைபெறும் சாலை பணிகளானாலும் சரி, ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் ஆனாலும் சரி, பாலம் கட்டுமான பணிகள் ஆனாலும் சரி. அனைத்து அரசு திட்ட பணிகளிலுமே வட மாநில தொழிலாளர்கள் தான் அதிக அளவில் வேலை செய்து வருகிறார்கள். இது தவிர தனியார் நிறுவனங்களின் கட்டுமான பணிகளிலும் வட மாநில தொழிலாளர்கள் தான் திரளாக காட்சியளிக்கிறார்கள்.

அது மட்டுமல்ல ஹோட்டல், அனல் மின் நிலையம் கட்டுமான பணிகள் என அனைத்து இடங்களிலும் வட மாநில தொழிலாளர்கள் தான் இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒடிசா போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.இவர்கள் தங்களது மாநிலத்தில் குடும்பம், பிள்ளை குட்டிகளை விட்டுவிட்டு தனியாக வருகிறார்கள். குழுகுழுவாக வருகிறார்கள் குழு குழுவாகவே தங்குகிறார்கள். அவர்களுக்கு காஸ் சிலிண்டரும், சப்பாத்தி மாவு கொடுத்தால் போதும் அவர்களே சமைத்து சாப்பிட்டுக் கொள்கிறார்கள். ஆறு மாதங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்துவிட்டு மனைவி மக்களை பார்ப்பதற்காக ஊருக்கு சென்று மீண்டும் வருகிறார்கள். இதுதான் இவர்களது நிலைமை. இவர்கள் அளவிற்கு தமிழக கட்டிட தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் வேலை செய்வது இல்லை என்பது ஒரு பெரிய குற்றச்சாட்டாக உள்ளது.இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இவர்களை பணியமத்துவதற்கு என்று சில ஏஜெண்டுகள் செயல்பட்டு வருகிறார்கள். அந்த ஏஜெண்டுகள் மூலம் தான் இவர்கள் எல்லா இடங்களிலும் பணிவாய்ப்புகளை பெறுகிறார்கள். இவர்களுக்கு முறையாக கூலி வழங்குவதில்லை என ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநில கட்டிட தொழிலாளர்கள் முறையாக ஊதியம் வழங்கப்படதை கண்டித்து இன்று வேலையை புறக்கணித்து திடீர் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

தூத்துக்குடியில் உள்ள பழைய பேருந்து நிலையம் இருந்த இடத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகள் கூடிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது.

இந்த பேருந்து நிலையம் அமைக்கும் கட்டிடப் பணியில் பெரும்பாலும் வடமாநில கட்டிடத்துள்ளார்களே ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் இவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை உணவு போன்ற வசதிகள் செய்து தருவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இதனை கண்டித்து இன்று வட மாநில கட்டிட தொழிலாளர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து பேருந்து நிலைய கட்டிட பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் வட மாநில தொழிலாளர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.மேலும் வட மாநில தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வெளி மாவட்டங்களில் இருந்து சிமெண்ட் கல் உள்ளிட்ட பொருள்களை ஏற்றி வந்த லாரிகள் பொருட்களை இறக்க முடியாமல் ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2Updated On: 2022-10-07T10:21:14+05:30

Related News

Latest News

 1. உலகம்
  கொலம்பியா நிலச்சரிவு: உயிரிழந்த 34 பேரில் எட்டு சிறுவர்கள்
 2. தென்காசி
  தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருகை: பாதுகாப்பு குறித்து தென்மண்டல...
 3. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
 4. திருவில்லிபுத்தூர்
  தொடர் மழை: சதுரகிரிமலை சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல...
 5. தொழில்நுட்பம்
  எலோன் மஸ்க் பயன்படுத்தவுள்ள நியூராலிங்க் தொழில்நுட்பம் என்றால்
 6. விளையாட்டு
  உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்
 7. திருவண்ணாமலை
  கார்த்திகைத் தீபத் திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார்...
 8. திருவண்ணாமலை
  அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
 9. இந்தியா
  சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு.. தீவிர சோதனைக்குப் பிறகே பக்தர்கள்...
 10. தூத்துக்குடி
  தூத்துக்குடி மாவட்டத்தில் பாலித்தீன் பைகளில் உணவுப் பொருட்களை...