/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 521 மனுக்களுக்கு தீர்வு: எஸ்.பி. தகவல்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஒரே நாளில் மொத்தம் 657 புகார் மனுக்கள் விசாரிக்கப்பட்டு 521 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 521 மனுக்களுக்கு தீர்வு: எஸ்.பி. தகவல்
X

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நேற்று (08.04.2023) மனு விசாரணை சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களின் மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் நடைபெற்ற மனு விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா, உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் மற்றும் சம்மந்தப்பட்ட மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு முகாம் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கூறியதாவது:

மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் புகார் மனு மீதான சிறப்பு விசாரணை முகாமில், தூத்துக்குடி உட்கோட்டத்தில் 114 மனுக்கள் விசாரிக்கப்பட்டு 81 மனுக்கள் மீதும், அதே போன்று தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 111 மனுக்கள் விசாரிக்கப்பட்டு 97 மனுக்களும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 73 மனுக்கள் விசாரிக்கப்பட்டு 46 மனுக்கள் மீதும் தீர்வு காணப்பட்டன.

ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 86 மனுக்கள் விசாரிக்கப்பட்டு 78 மனுக்களும் மணியாச்சி உட்கோட்டத்தில் 61 மனுக்கள் விசாரிக்கப்பட்டு 43 மனுக்களும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 61 மனுக்கள் விசாரிக்கப்பட்டு 54 மனுக்களும், விளாத்திக்குளம் உட்கோட்டத்தில் 72 மனுக்கள் விசாரிக்கப்பட்டு 61 மனுக்களும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 79 மனுக்கள் விசாரிக்கப்பட்டு 61 மனுக்களும் மொத்தத்தில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் மொத்தம் 657 மனுக்கள் விசாரிக்கப்பட்டு 521 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்கள் தெரிவித்தார்.

Updated On: 9 April 2023 3:52 AM GMT

Related News