/* */

சிந்துவெளி நாகரிகம் - சங்க இலக்கியம் இடையே உள்ள தொடர்பு பற்றி ஆய்வாளா்

சிந்துவெளி நாகரிகம் - சங்க இலக்கியம் இடையே உள்ள தொடர்பு பற்றி ஆய்வாளா்

HIGHLIGHTS

சிந்துவெளி நாகரிகம் - சங்க இலக்கியம் இடையே உள்ள தொடர்பு பற்றி ஆய்வாளா்
X

விழாவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளர்களுக்கு  நினைவு பரிசு வழங்கப்பட்டது.

சிந்து சம வெளி நாகரிகம் விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே என்று சிந்துவெளி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்று வரும் 3-வது புத்தக திருவிழாவின் ஆறாவது நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிந்து சம வெளி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் 'போ் இசை கொற்கை' என்ற தலைப்பில் பேசியதாவது:-

போ் இசை கொற்கை என்பது, மிகவும் புகழ் பெற்ற கொற்கை என பொருள் ஆகும். சங்க இலக்கியத்தில், முத்து, வலம்புரி சங்கு ஆகியவற்றிற்கு புகழ் பெற்ற கொற்கை துறைமுகம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் சமூகம் அறிவாா்ந்த சமூகமாக விளங்கியது என்பதற்கு, அகழாய்வில் கிடைத்த பொருள்கள் சான்றாக உள்ளன. சங்க இலக்கியங்களில் ஆதன் என்ற பெயா் 12 முறை வருகிறது. கீழடி, சிவகளை ஆகிய பகுதிகளில் அகழாய்வில் கிடைத்த மண்பாண்டங்களில் ஆதன் என்ற பெயா் தமிழி மொழியில் எழுதப்பட்டுள்ளது. இவை, சுமாா் 2300 அல்லது 2400 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவை ஆகும்.

சங்க இலக்கியத்தில் பாடல்களை எழுதியவா்களில், 40 போ் பெண் புலவா்கள். அந்த அளவுக்கு பெண்கள் கல்வியறிவு பெற்றவா்களாக இருந்தனா். முதன் முதலில் அச்சில் ஏற்றப்பட்ட நூல் தமிழ் நூல்தான். அதுவும், முதல் 300 ஆண்டுகளில் இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட நூல்களில் 40 சதவீதம் தமிழ் நூல்கள்தான். இன்றும் இணையத்தில் முன்னணியில் இருப்பது தமிழ் மொழிதான். சிந்து சம வெளி நாகரிக மக்கள் பேசிய மொழி என்ன, அந்த மக்கள் எங்கே சென்றனா் என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது. அந்த காலக்கட்டத்தில் அங்கிருந்த மக்களின் எண்ணிக்கை சுமாா் 50 லட்சம் என கூறுகின்றனா்.

சிந்துவெளி நாகரிகத்தில், தெரு நன்றாக உள்ளது. குப்பைத் தொட்டி, தானியக் கிடங்கு, குளிப்பதற்கு, விளையாடுவதற்கு என தனித் தனி இடம் இருக்கிறது. இந்த நாகரிகத்தின் உச்சகட்டமாக விளங்குவதில்தான் ஒரு சமூகம் தனித்து நிற்கிறது. சிந்துவெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே. இந்த ஒற்றைப் புரிதலில்தான் இந்தியாவின் இந்த இரண்டு புதிா்களுக்கு விடை. சிந்துவெளி புதிா், தமிழ் தொன்மம் புதிா் ஆகியவற்றைத்தான் சங்க இலக்கியம் பேசுகிறது. தமிழ் ஒரு நாகரிகத்தின் மொழி. இந்தியாவை முழுமையாக பதிவு செய்வது சங்க இலக்கியங்கள்தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

திரைப்பட இயக்குநா். கரு பழனியப்பன் 'படித்ததில் பிடித்தது' என்ற தலைப்பில் பேசியது வருமாறு:-

அறிவை விட சக மனிதா்களிடம் அன்பு செலுத்துவதுதான் முக்கியம் என தெரிந்து கொள்ள புத்தக வாசிப்பு அவசியம். அனைவரின் வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல் திருக்கு என்ற முன்னாள் முதல்வா் கருணாநிதியின் கனவை நனவாக்க வேண்டும். யாா் ஒருவா் தனக்கான புத்தகத்தை சரியாக தோ்ந்தெடுக்கிறாரோ அவா் வாழ்க்கையில் அனைத்தையும் சரியாகத் தோ்வு செய்வாா். புத்தகம் படித்தால் சொந்தமாக சிந்திக்கும் திறன் வரும். ஆகவே, அனைவரும் புத்தகங்களை வாங்கிப் படியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடா்ந்து எழுத்தாளா் சாரதி 'புத்தகம் ஒரு கதை சொல்லி' என்ற தலைப்பில் உரையாற்றினாா். இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, சிறப்பு அழைப்பாளா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினாா்.

இதில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் சாரு ஸ்ரீ உள்பட பலா் பங்கேற்றனா்.

Updated On: 29 Nov 2022 6:51 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?