/* */

கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தி.மு.க. ஐ.டி.விங் திசை திருப்புவதா?

Cylinder Blast News -கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தி.மு.க. ஐ.டி.விங் திசை திருப்புவதாக சசிகலா புஷ்பா குற்றம் சாட்டியுள்ளார்.

HIGHLIGHTS

கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தி.மு.க. ஐ.டி.விங் திசை திருப்புவதா?
X

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Cylinder Blast News -கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி ஒரு கோயில் முன்பு கார் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் காருக்குள் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் இந்த விபத்து நடந்ததாக முதலில் கோவை போலீசாரால் கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த 5 பேரை போலீசார் உபா சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்த ஜமேஷா முபினின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது இந்த வழக்கில் என்ஐஏ அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஆளுங்கட்சியான தி.மு.க. தொடர்ந்து மவுனம் காத்து வருவதாக எதிர்கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பா, கோவை கார் வெடிப்பு சம்பவத்தை திசை திருப்பும் வகையில் தி.மு.க.வை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணியினர் சமூக வலைதங்களில் அவதூறு பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து சசிலகா புஷ்பா தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு:-

ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த எனக்கு டெல்லியில் அரசு அளித்த வீடு குறித்தும் சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. எம்.பி.யாக இருந்தவர்கள் அவர்களுடைய பதவி காலம் முடிந்த பிறகும் முன்னாள் எம்.பி.க்களுக்கான கோட்டா என ஒன்று இருக்கிறது. அந்த அடிப்படையில், ஒவ்வொரு முன்னாள் எம்.பி.க்களுக்கும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை புதுப்பித்து அந்த வீட்டில் இருக்கக் கூடிய வாய்ப்பை மத்திய அரசாங்கம் கொடுத்திருக்கிறது.

நான் மட்டுமல்ல அனைத்து கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.க்களும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு காரணம் இருந்தால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த அடிப்படையில், அதற்கான சரியான காரணம் எனக்கு இருந்தது என்கின்ற அடிப்படையில், மூன்று மாதத்திற்கு ஒரு முறை அந்த வீடு புதுப்பிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டதாலும், இங்கு அதிகமான வேலைகள் இருந்ததாலும் நான் டெல்லிக்கு இப்போது அடிக்கடி செல்லவில்லை, அந்த வீடு அரசுக்கு சொந்தமானது. ஆனால், வேண்டும் என்றே ஒரு வதந்தியை பரப்ப வேண்டும் என்பதற்காக உள்நோக்கத்துடன் சமூக வலைதளத்தில் தவறாக பரப்பப்பட்டு வருகிறது.

மேலும், அரசியலுக்கு பெண்கள் வரவே கூடாதா? அரசியலுக்கு பெண்கள் வந்தாலே தப்பாக, சித்தரித்து பதிவு செய்கிறார்கள். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. நாங்களும் ஒரு கட்சியை சேர்ந்தவர்கள், அவதூறு பரப்பியது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த ராஜவேல் என்பவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனு மீது நிச்சயமாக போலீஸார் வழக்கு பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன். இதில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றிய அரசு என்கின்ற அந்த ஒரு வார்த்தையும் சில இடங்களில் உள்ளது.

மேலும், தூத்துக்குடியில், பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோருக்கு இது நன்றாகவே தெரியும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறப்போவது உறுதி. ஒரு பெண் என்று கூட பாராமல் என்னை பற்றி சமூக வலைதளங்களில் தவறாக பதிவு செய்து வருகிறார்கள். கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை திசை திருப்ப இந்த மாதிரி ஒரு தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

கட்சி ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் மட்டும் மோத வேண்டுமே தவிர பெண்களை அசிங்கப்படுத்த கூடாது. பெண்களைக் கேவலப் படுத்தினால் அவர்கள் வீட்டிற்குள் ஒளிந்து கொண்டு விடுவார்கள் என நினைத்துக் கொள்ள வேண்டாம்.

எனக்கு பின்பு என்னை பின்பற்றி பல பெண்கள் அரசியலுக்கு வருவார்கள். பாரதிய ஜனதா கட்சிக்குதான் வர வேண்டும் என்றில்லை. சாதாரண குடும்பத்தில் உள்ள பெண்களாக இருந்தாலும் அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியினர் தான் இது மாதிரி நிறைய விஷயங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள்.

முன்னாள் எம்.பி. என்று கூட பாராமல் நான் உல்லாச விடுதி நடத்தினேன் என கூறியது கேவலமான பேச்சு. பெண்களை ஆபாசமாக பொதுவெளியிலும், அரசியலில் இருக்கிற பெண்களையும் பேச வேண்டாம். பா.ஜ.க.வில் உள்ள பெண்களை திட்டுவதற்கு பதிலாக, மத்திய அரசின் திட்டங்களை பற்றி கேளுங்கள்.

சமூக வலைதளங்களில் என்னை பற்றியும், தவறான போட்டோக்களை சித்தரித்தும் பதிவு செய்பவர்கள் மீது வழக்கு பாயும். அது மட்டுமில்ல கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டஈடு நீங்கள் கொடுக்க வேண்டியது இருக்கும். இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 Oct 2022 12:40 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?