/* */

டெல்லி பெண் காவலர் படுகாெலை சம்பவம்: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டெல்லி பெண் காவலர் பாலியல் படுகாெலை சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

டெல்லி பெண் காவலர் படுகாெலை சம்பவம்: தமிழக வாழ்வுரிமை கட்சியினர்  ஆர்ப்பாட்டம்
X

தூத்துக்குடியில் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த மாதம் டெல்லியில் சபியா என்ற பெண் காவல் அதிகாரியை பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமான முறையில் கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தூத்துக்குடி மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் விவிடி சிக்னல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் கிதர்பிஸ்மி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில ஊடகப்பிரிவு துணை செயலாளர் உமர் வரவேற்புரையாற்றினார். இதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஜொரோன் குமார், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஓருங்கிணைப்பாளர் பேராசரியை பாத்திம்மா பாபு உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

பின்னர் இதுகுறித்து, செய்தியாளர்களிடம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஜொரோன் குமார் கூறுகையில், தலைநகரான டெல்லி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் அதிகாரியாக கடந்த 4 மாதங்களுக்கு முன்புபணியில் சேர்ந்த பெண் அதிகாரியை பல நபர்கள் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து 50-க்கும் மேற்பட்ட இடங்களில் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொடூரக் கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இன்றைக்கு தூத்துக்குடியில் போராட்டத்தை முன்எடுத்திருப்பதாக குறிப்பிட்டார்.

உடனடியாக மத்திய அரசு இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறக்கூடிய குற்றங்களை தடுக்க புதிய சட்டங்களை அமல்படுத்தி அதன் மூலமாக இந்திய நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார். முன்னதாக கொடூரக் கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்நிகழ்ச்சியில் நாட்டுப்படகு சங்க ஓருங்கிணைப்பாளர் ரீகன், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் அமைப்புச் செயலாளர் ஆர்.கே பாவேந்தர் நன்றியுரையாற்றினார். கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி, எஸ்டிபிஐ, தமுமுக, விசிக, திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  2. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  3. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  4. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  6. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம்
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  9. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  10. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!