/* */

தூத்துக்குடியில் அண்ணா பிறந்த நாள் விழா: அரசியல் கட்சிகள் காெண்டாட்டம்

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் அண்ணா பிறந்த நாள் விழா: அரசியல் கட்சிகள் காெண்டாட்டம்
X

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பேரறிஞர் அண்ணாவின் 113து பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காய்கறி மார்க்கெட் அருகே உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுபோன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மீனவர் நலன் மற்றும் கால்நடைதுறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், திமுக மாணவரணி மாநில துணைச்செயலாளர் உமரிசங்கர் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தூத்துக்குடி மாவட்ட மதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தமிழ்ச்சாலை ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் தர்மம் தலைமையில் மாநகரச் செயலாளர் முருகபூபதி முன்னிலையில் மதிமுகவினர் பேரறிஞர் அண்ணாவின் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் மதிமுக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட அவைத்தலைவர் தர்மம், மாநகரச் செயலாளர் முருகபூபதி, மீனவர் அணி செயலாளர் நக்கீரன், தெற்கு மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, மாநகர அவைத்தலைவர் செந்தாமரைக் கண்ணன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் தொம்மை, எம்.எல்.எப் மாநில துணைத் தலைவர் எபனேசர் தாஸ், மாநில பொருளாளர் அனல் செல்வராஜ், திட்டத் தலைவர் சந்திரன், கௌரவ ஆலோசகர் டேவிட் முருகேசன், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் கேஏபி.குமார், பொன்ராஜ், சுந்தரராஜ், மாநகர பொருளாளர் சாஞ்சி செல்லப்பா, மகாராஜன் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவை வாழ்த்தியும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை வாழ்த்தியும் கோஷங்களை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் நூற்றுக்கணக்கான அதிமுக நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்விற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல் தலைமை தாங்கினார். அமைப்புச் சாரா ஓட்டுநரணி மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், முன்னாள் எம்.பி நட்டர்ஜி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வக்கீல் வீரபாகு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் யு.எஸ்.சேகர், மாவட்ட இலக்கிய அணி செயலளார் நடராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சுதர்சன்ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் அருண்ஜெபக்குமார், வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜாக்சன்துரைமணி, மாவட்ட இணை செயலளார் செரினாபாக்கியராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சேர்மன் வசந்தாமணி, மாநகரப் பகுதி கழக செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், நட்டார் முத்து, ஒன்றியச் செயலாளர்கள் சௌந்திரபாண்டி, மீளவிட்டான் ஜவகர், பேரூராட்சி கழக செயலாளர்கள் காசிராஜன், செந்தில்ராஜ்குமார், துரைசாமிராஜா, வேதமாணிக்கம், மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதிமணிகன்டன், வக்கீல் செங்குட்டுவன் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Sep 2021 11:56 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?