/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 52 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டதில் சட்டவிரோதமாக செயலில் ஈடுபட்டவர்கள்52 பேர் கைது செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 52 பேர் கைது
X

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவின்பேரில் அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார்ரோந்துப் பணி மேற்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில், கஞ்சா விற்பனை, புகையிலைப் பொருட்கள், மதுபாட்டில்கள் மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 6 வழக்கும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 8 வழக்கும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 5 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 5 வழக்களும், மணியாச்சி உட்கோட்டத்தில் 3 வழக்கும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 10 வழக்கும், விளாத்திக்குளம் உட்கோட்டத்தில் 5 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 4 வழக்குகளும், மதுவிலக்கு காவல் நிலையங்களில் 4 வழக்குகளும் ஆக மொத்தம் 50 வழக்குகள் பதிவு செய்து 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரும், மதுபாட்டில்கள் விற்பனை செய்த 26 பேரும், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 21 பேரும், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1 கிலோ 400 கிராம் கஞ்சா, 634 புகையிலைப் பாக்கெட்டுகள், 225 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 Dec 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  2. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  3. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  5. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  6. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  7. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  8. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  9. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?