தூத்துக்குடியில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை
தூத்துக்குடியில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
HIGHLIGHTS

தூத்துக்குடியில் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர் கண்ணன்.
தூத்துக்குடி தாளமுத்துகரை சேர்ந்தவர் கண்ணன்(50). திமுக பகுதி செயலாளரான கண்ணன் தாளமுத்துநகர் அடுத்துள்ள பாலதண்டாயுதபாணிநகரில் டெய்லர் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பகுதியில் வாலிபர்கள் சிலர் பெண்களை கேலி செய்துள்ளதாக தெரிகிறது. அப்போது இதனை கண்ட கண்ணன் பெண்களை கேலி செய்தவர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் அந்த கும்பலுக்கும், கண்ணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு கண்ணன் கடையில் இருந்தபோது, அரிவாள் மற்றும் கத்தியுடன் கடைக்குள் புகுந்த 2 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி கண்ணன் உடலை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கண்ணனை கொலை செய்த மர்ம நபர்கள் 2 பேரை தேடி வருகின்றனர். திமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகொலை செய்யப்பட்ட கண்ணனுக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் வி.கே.புதூர் ஆகும்.