/* */

தூத்துக்குடியில் ஹோட்டலுக்கு சீல்.. உணவு பாதுகாப்புத் துறை அதிரடி நடவடிக்கை…

தூத்துக்குடியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருளை தெரு நாய் அசுத்தப்படுத்திய விவகாரத்தில் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் ஹோட்டலுக்கு சீல்.. உணவு பாதுகாப்புத் துறை அதிரடி நடவடிக்கை…
X

தூத்துக்குடியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருளை தெரு நாய் அசுத்தப்படுத்திய விவகாரத்தில் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் ஹோட்டல்கள், சிறிய வகை உணவகங்கள், இனிப்பகங்கள், இறைச்சி கடைகள் மீது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி ஜார்ஜ் ரோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் சவர்மா அடுப்பில் இருந்த சிக்கனையும், மற்ற உபகரணங்களையும் தெரு நாய் ஒன்று அசுத்தப்படுத்தியதாக புகார் எழுந்தது. மேலும், தெருநாய் சிக்கனை சாப்பிடுவது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைராக பரவியது.


இதைத்தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் உத்திரவின் பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, அந்த உணவகத்தில் 7 கிலோ பழைய சிக்கன் உள்ளிட்ட கெட்டுப்போன உணவுப் பொருட்கள் 15 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

மேலும், உணவகத்தில் இருந்த பொது சுகாதார குறைபாட்டிற்காகவும், கால்நடைகள் அணுகும் வண்ணம் சமையல் உபகரணங்களையும், உணவுப் பொருட்களையும் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததாலும், உரிம நிபந்தனைகளை மீறியிருந்ததாலும், அந்த உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிகமாக இடைக்கால ரத்து செய்யப்பட்டது.

மேலும், தொடர் விசாரணைக்காக உணவகத்தினை மூடி முத்திரையிடவும் நியமன அலுவலர் உத்திரவிட்டதின் பேரில், அந்த உணவகம் மாவட்ட நியமன அலுவலரின் உரிய உத்திரவின் கீழ் உணவு பாதுகாப்பு அலுவலரால் மூடி சீல் வைக்கப்பட்டது.

மேலும், நுகர்வோர் உண்ணத் தகுந்த உணவுப் பொருட்களை தெரு நாய் அசுத்தப்படுத்திய விவகாரம் குறித்து தொடர் விசாரணை நடத்தி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் கூறியதாவது:

மாவட்டத்தில் உணவகங்கள் சுகாதாரத்தைப் பேணி, பொதுமக்களுக்கு சுகாதாரமான, பாதுகாப்பான உணவை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-இன் கீழ் உணவகத்தின் இயக்கத்தினை நிறுத்துதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும், நுகர்வோர்கள் உணவகங்களில் உணவு பாதுகாப்பு குறைபாடுகள் எவற்றையேனும் கண்டறிந்தால், மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் அலுவலக வாட்ஸ்அப் புகார் எண்ணான 9444042322 என்ற எண்ணிற்கு புகார் அளித்தால், விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளிப்பவரது விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்தார்.

Updated On: 30 Jan 2023 9:25 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  4. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  6. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  8. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  9. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  10. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...