/* */

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
X

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் தொடர்ந்து மணல் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜா ராபர்ட் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்படுகை பகுதியில் ஸ்ரீவைகுண்டம் சந்ததையடி தெருவை சேர்ந்த இசக்கிராஜா என்ற ராசாக்கிளி (27) என்பவர் சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் 11 மூட்டை ஆற்று மணலை திருடியது தெரியவந்தது. இதையெடுத்து, அவரை கைது செய்த போலீசார் மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.


இதேபோல, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் உதவி ஆய்வாளர் ரேணுகா மற்றும் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது ஸ்ரீவைகுண்டம் பொன்னன்குறிச்சி பகுதி அருகே உள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற கருப்பசாமி (27) என்பவர் 10 மூட்டை ஆற்று மணலையும் திருடியது தெரியவந்தது.


இதனையடுத்து உடனடியாக கருப்பசாமியை கைது செய்த, அவரிடம் இருந்த 10 மூட்டை ஆற்று மணல் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இசக்கிராஜா என்ற ராசாக்கிளி மீது ஏற்கெனவே ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகளும், கண்ணன் என்ற கருப்பசாமி மீது கொலை முயற்சி உட்பட 10 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 May 2023 3:26 PM GMT

Related News