/* */

திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ஆணை வழங்கிய தூத்துக்குடி ஆட்சியர்!

ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மனு அளித்த திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

HIGHLIGHTS

திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ஆணை வழங்கிய தூத்துக்குடி ஆட்சியர்!
X

திருநங்கைக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையம், ஆதார் மையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலக வளாகம் ஆகிவற்றை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 15 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை அவர் வழங்கினார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 27.03.2023 அன்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் திருநங்கைகள் இருவர் மனு அளித்து இருந்தனர்.


ஸ்ரீவைகுண்டம் வட்டம் வசவப்பபுரம் கிராமம் இந்திராநகர் திருநங்கைகள் காலணியில் வசிக்கும் திருநங்கைகளான ஷிவானி மற்றும் பொன்னி ஆகியோர் உதவித் தொகை வேண்டி மனு அளித்திருந்த நிலையில், அந்த மனுவினை மாவட்ட ஆட்சியர் உடனடியாக பரிசீலனை செய்து, திருநங்கைகள் இருவருக்கும் மாதம்தோறும் ரூ.1,500 உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு பொறியாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். பின்னர், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வசவப்பபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தினை ஆய்வு செய்தார்.


வசவப்பபுரம் ஊராட்சி இந்திராநகர் பகுதியில் திருநங்கைகளுக்கு ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு அவர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டறிந்தார்.

பின்னர், வசவப்பபுரம் ஊராட்சி அனவரதநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும் வகுப்பறைகளின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு, தலைமை ஆசிரியரிடம் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டறிந்தார்.

மேலும், ஆய்வின்போது மாணவர்களுடன் ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்துரையாடினார். ஆய்வின்போது, தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 29 March 2023 12:13 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து